பூங்கோதை (இயற்பெயர்: கலா ஸ்ரீரஞ்சன்). தமிழ்நாடு: பரிதி பதிப்பகம், 56 சீ/128, பாரத கோயில் அருகில், ஜோலார்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டம் 635 851, 1வது பதிப்பு, நவம்பர் 2021. (சென்னை 600 017: மணி ஓப்செட்).
102 பக்கம், விலை: இந்திய ரூபா 100., அளவு: 22.5×14.5 சமீ., ISBN: 978-93-94187-03-0.
நிறமில்லா மனிதர்கள், வெளிநாட்டு ஐயா, ஊமைக் கனவுகள், மௌனமான யுகங்கள், புன்னகை, கீறல்கள், கிராமத்து மல்லிகை, காதுகளும் கதவுகளும், செவ்வந்தித் தோட்டம், காகிதப் பூக்கள், பெரியவீட்டார் பெண்கள் ஆகிய பதினொரு சிறுகதைகளின் தொகுப்பு. சர்வதேசப் பெருநகர மனிதவாழ்வின் வேககதியிலான அனுபவங்கள் பூங்கோதையின் கதைகளில் வெளிப்படுகின்றன. குரூரமும் சுயநலமும் இவரது கதாமாந்தர்களின் இயல்பாகக் காட்டப்படுகின்றன. மானிட வெறுப்பு மனநிலை கொண்டவனின் (Anthropophobia) கதையான “காதுகளும் கதவுகளும்,” குடும்ப வன்முறை பற்றிப் பேசும் “புன்னகை” என்று இவரது கதைக் களங்கள் வித்தியாசமானவை. பூங்கோதையின் மொழிநடை சரளமானது. எள்ளல் கலந்த வசீகரமான ஈழத் தமிழ்மொழி நடையைத் தனது எழுத்தில் கைவரப் பெற்றுள்ளார்.