16686 நோ போல் (No Ball).

எஸ்.கிருஷ்ணமூர்த்தி. கிளிநொச்சி: மகிழ் பதிப்பகம், 754, கனகராசா வீதி, திருநகர் வடக்கு, 1வது பதிப்பு, பெப்ரவரி 2022. (அச்சக விபரம் தரப்படவில்லை).

56 பக்கம், விலை: ரூபா 200., அளவு: 22×14 சமீ.

அவுஸ்திரேலியா விக்ரோரியா மாநிலத்தில் மெல்பன் நகரில் வதியும் எஸ். கிருஷ்ணமூர்த்தி, யாழ்ப்பாணம், இடைக்காடு கிராமத்தில் பிறந்தவர். இந்நூலில் ஒரு காரின் கதை, ஒரு வீடு-இரு வேறு உலகம், வேல் அன்பன், சாப்பாடு, நோ போல், உயிர், காந்தியின் கதை, பசி ஆகிய எட்டு கதைகள் இடம்பெற்றுள்ளன. நூலின் இறுதியில் “சின்னஞ் சிறிய சிறுகதை தொகுப்பு” என்ற தலைப்பில் சாம்ராஜ் எழுதிய குறிப்பும் இடம்பெற்றுள்ளது.

ஏனைய பதிவுகள்

12271 – பண்டங்கள் சேவைகள் வரிச் சட்டத்தின் கைநூல்.

உள்நாட்டு இறைவரித் திணைக்களம். கொழும்பு: உள்நாட்டு இறைவரித் திணைக்களம், 1வது பதிப்பு, நவம்பர் 1998. (மஹரகம: தரஞ்ஜீ பிரின்ட்ஸ், 506, ஹைலெவல் வீதி, நாவின்ன). (4), 56 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21.5×13.5