16688 பாசப் பிரவாகம் (சிறுகதைத் தொகுதி).

நீர்வை பொன்னையன். கொழும்பு 6: இலங்கை முற்போக்கு கலை இலக்கிய மன்றம், 18, 6/1, கொலிங்வுட் பிளேஸ், 1வது பதிப்பு, மார்ச் 2020. (கொழும்பு 5: R.S.T.என்டர்பிரைஸஸ், C/3/4, அன்டர்சன் தொடர்மாடி).

105 பக்கம், விலை: ரூபா 350., அளவு: 20.5×15 சமீ.

1960களில் இலக்கியத்துறைக்குள் நுழைந்த ஈழத்தின் பிரபல்யமான படைப்பாளி நீர்வை பொன்னையன் தனது 90அவது அகவையில் எழுதியுள்ள ஏழு சிறுகதைகளின் தொகுப்பு இதுவாகும். விழிகள், அசைவெட்டு, மரணத்தின் நிழல், தெளிவு, பாசப்பிரவாகம், அடையாளம், உழைப்பாளி ஆகிய தலைப்புகளில் இக்கதைகள் எழுதப்பட்டுள்ளன. நீர்வை பொன்னையன் (24.03.1930 – 26.3.2020) ஈழத்து முற்போக்கு எழுத்தாளர்களில் ஒருவர். சிறுகதை, நாட்டார் கதை, இலக்கியக் கட்டுரைகள் எனப் பலவற்றையும் எழுதியவர். ஐம்பது ஆண்டுகளாக இடதுசாரி அரசியலில் உறுதியாக நின்றவர். தனது  வாழ்வின் இறுதிக் காலம் வரை எழுதிக் கொண்டிருந்தவர். இவரது முதலாவது சிறுகதை 1957 ஆம் ஆண்டில் ஈழநாடு பத்திரிகையில் வெளிவந்தது. கவிஞர் இ. நாகராஜன் நடத்தி வந்த “தமிழன்” என்ற பத்திரிகையில் பல சிறுகதைகளை ஆரம்பகட்டத்தில் எழுதினார். இவரது முதல் சிறுகதைத் தொகுதி “மேடும் பள்ளமும்” 1961 இல் வெளிவந்தது. இவரது உதயம், மூவர் கதைகள், பாதை, வேட்கை, உலகத்து நாட்டார் கதைகள், முற்போக்கு இலக்கிய முன்னோடிகள், நாம் ஏன் எழுதுகின்றோம்? போன்ற நூல்கள் ஈழத்து முற்போக்கிலக்கியப் பரப்பில் வரவேற்பினை பெற்றிருந்தன. இவருக்கு 2017 ஆம் ஆண்டில் இலங்கை அரசின் “சாகித்திய ரத்னா” விருது கிடைத்தது. பாசப்பிரவாகம் சிறுகதைகள் ஏழும் இவரது வாழ்வின் இறுதிக்கட்டங்களில் எழுதப்பெற்றவை.

ஏனைய பதிவுகள்

14586 என் இதயம் பேசுகிறது.

ஏ.சீ.எம்.இப்றாஹீம். கிண்ணியா 4: பேனா பதிப்பக வெளியீடு, 118, நகரசபை வீதி, 1வது பதிப்பு, 2015. (தெகிவளை: ஏ.ஜே.பிரின்ட்ஸ், இல. 44, புகையிரத நிலைய வீதி). 108 பக்கம், விலை: ரூபா 350., அளவு:

Spin Online game Slots

Articles Rating 50percent As much as a lot of Basic Deposit Incentive Best Online casino Which have Real money Gambling games Can get 2024 Game