சி.மார்க்கண்டு (புனைபெயர்: மாவன்னா). பருத்தித்துறை: வடமராட்சி வடக்கு கலாசாரப் பேரவை. 1வது பதிப்பு, டிசம்பர் 2016. (நெல்லியடி: ஸ்நேகன் பதிப்பகம்).
xiv, 119 பக்கம், விலை: ரூபா 300., அளவு: 20.5×13.5சமீ., ISBN: 978-955-43797-0-1.
மனிதநேயச் சிந்தனை கொண்ட படைப்பாளியான ”மாவன்னா”வின் சமூக நீதியையும் சமூக நெறிகளையும் அவாவி நிற்கும் கதைகளைத் தன்னகத்தே கொண்டு வெளிவந்துள்ளது பாதை தெரியாத பயணங்கள் என்ற இச்சிறுகதைத் தொகுப்பு. யாழ்ப்பாணி, கள்ளப் பூனை, வார்ப்பு, பாதை தெரியாத பயணங்கள், வேள்விப் படையல், ஆருக்கு விடுதலை, நூல் விழுங்கிகள், மணப்பாவை, பரிசு தந்த கதை, காணாமல் போன குஞ்சுகள் ஆகிய பத்துக் கதைகள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன. அனைத்தும் எளிமையான மொழிநடையில் எழுதப்பட்டுள்ளன. இத்தொகுதியில் உள்ளடங்கும் கதைகள் வாழ்வனுபவத்தில் முதிர்ந்த ஒருவர் வாழ்வுக்கான நெறிமுறைகளைப் போதிப்பதில் கொண்ட சமூக அக்கறையை வெளிப்படுத்துவனவாக உள்ளன. ஆசிரியரின் படைப்புலகம் எந்தவிதமான பாசாங்குகளுமற்ற யதார்த்த சிந்தனையின் வெளிப்பாடாக உள்ளது.