16692 பிள்ளை கடத்தல்காரன்.

அ.முத்துலிங்கம். நாகர்கோவில் 629001: காலச்சுவடு பதிப்பகம், 669, கே.பி.சாலை, 1வதுபதிப்பு, ஜீலை 2015. (சென்னை 600 077: மணி ஓப்செட்).

190 பக்கம், விலை: இந்திய ரூபா 195., அளவு: 22.5×15 சமீ., ISBN: 978-93-84641-23-8.

“தமிழின் முதன்மையான கதைசொல்லிகளுள் ஒருவர் அ. முத்துலிங்கம். இத்தொகுப்பிலுள்ள 20 சிறுகதைகளில் அநேகமானவை உண்மைச் சம்பவங்களிலிருந்து கலையம்சத்துடன் புனையப்பட்டவை. இவற்றை படைக்கும்போது தனக்கென ஆகிவந்த ஒரு சொல் முறையை கையாண்டு வாசகரை வசியம் செய்துவிடுகிறார். பல்வேறு நிலப்பரப்புகள், மாறுபட்ட மனிதர்கள், பரிச்சயமற்ற கலாச்சாரச் சூழல்களினூடாக நிகழும் இவருடைய கதைகளின் ஆதாரமான உணர்வு அங்கதம். எனினும், அதனடியில் விலக்க முடியாத நிழல்போல மானிட உணர்வுகளின் ஏக்கமும் நெகிழ்வும் துயரமும் கண்ணீரும் அழியாத சித்திரங்களாய் விரவிக் கிடக்கின்றன. உலகத்து மேடையில் மனிதத் தொகையின் விநோதமான வாழ்வியல் சித்திரங்களால் நெய்த அழகிய கம்பளமாக இத்தொகுப்பை உருவகித்துக் கொள்ளலாம்” (பின்னட்டைக் குறிப்பு). முதல் ஆச்சரியம், சூனியக்காரியின் தங்கச்சி, பிள்ளை கடத்தல்காரன், நிலம் எனும் நல்லாள், எலிமூஞ்சி, இலையுதிர் காலம், அது நான் தான், ஆதிப் பண்பு, பதினொரு பேய்கள், சின்னச் சம்பவம், மணணெண்ணெய் கார்காரன், ஒன்றைக் கடன்வாங்கு, லூக்கா 22:34, நான்தான் அடுத்த கணவன், ரயில் பெண், கடவுச்சொல், வாடகை வீடு, கடவுளை ஆச்சரியப்படுத்து, உன்னுடைய கால அவகாசம் இப்பொழுது தொடங்குகிறது, வால்காவிலிருந்து கனடா வரை ஆகிய 20 கதைகள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. அ.முத்துலிங்கம் யாழ்ப்பாணத்தில் கொக்குவில் கிராமத்தில் பிறந்து வளர்ந்தவர். அறுபதுகளில் எழுத ஆரம்பித்து இன்றும் இவருடைய பணி தொடர்கின்றது. கனடாவில் குடும்பத்துடன் வாழ்ந்து வருகின்றார். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 70075).

ஏனைய பதிவுகள்

FAQ Aide & demande

Satisfait Spin for Cash Real Money Slots Game Risk Gratuit – Pourboire , ! encarts publicitaires de salle de jeu Winorama Spin Salle de jeu