16698 மகிழ்ச்சிப் பேரிகை: சிறுகதைகள்.

திக்குவல்லை கமால் (இயற்பெயர்: முகம்மது ஜெலால்தீன் முகம்மது கமால்). பருத்தித்துறை: ஜீவநதி வெளியீடு, கலையகம், சாமணந்தறை ஆலடிப் பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, செப்டெம்பர் 2022. (பருத்தித்துறை: பரணீ அச்சகம், நெல்லியடி).

80 பக்கம், விலை: ரூபா 400., அளவு: 20.5×14.5  சமீ., ISBN: 978-624-5881-51-2.

இந்நூலில் மகிழ்ச்சிப் பேரிகை, உறவுப் போர்வைக்குள், காணிக்கை, தவறான தராசு, வரவேற்பு, தங்க அப்பிள், முலாம் பூசிகள், 24 மணி நேரம், சொர்க்கத்து மாளிகை, காணி நிலம் வேண்டும், தாயின் பிரார்த்தனை, சந்தனம் மணக்கும் சாக்கடை ஆகிய பன்னிரு சிறுகதைகள் இடம்பெற்றுள்ளன. இந்நூல் 231ஆவது ஜீவநதி வெளியீடாக வெளியிடப்பட்டுள்ளது. திக்குவல்லை கமால். (பிறப்பு: மார்ச் 3, 1950) ஈழத்து தமிழ்க் கலை இலக்கியத் துறையில் பங்காற்றி வரும் தென்னிலங்கை முஸ்லிம் படைப்பாளிகள் வரிசையில் கவனத்திற்குரிய ஒரு படைப்பாளி. இலங்கையின் தென் மாகாணத்தில், மாத்தறை மாவட்டத்தில் அமைந்துள்ள திக்குவல்லை எனும் ஊரில் பிறந்த கமால், அக்கிராமத்து மக்களின் பேச்சு வழக்கினைக் கொண்ட படைப்புக்களை ஈழத்து படைப்பிலகிற்கு வழங்கிய முன்னோடிகளுள் ஒருவராவார். தர்கா நகர் சாகிரா மகா வித்தியாலயம் வெளியிட்ட தட்டெழுத்து கவிதை ஏடான “சுவை” மூலம் இலக்கிய உலகுக்கு அறிமுகமான கமால், பல சிறுகதைகள், புதினங்கள், புதுக்கவிதைகள், வானொலி நாடகங்கள் எனப் பல்வேறு வடிவங்களில் தனது இலக்கிய பங்களிப்பை ஆற்றி இருக்கிறார்.

ஏனைய பதிவுகள்

Campaigns

Posts Gambling establishment Vintage Comment Canada Videos ports There are over fifty variations to make their select, yet , each one is equally tempting and