ஷாறா. கொழும்பு 9: ஷாறா, 26/12, தெமட்டகொட பிளேஸ், 1வது பதிப்பு, மார்ச் 1918. (கொழும்பு 9: இஸ்லாமிய புத்தக இல்லம், I.B.H., இல. 77, தெமட்டகொட வீதி).
xiv, 119 பக்கம், விலை: ரூபா 250., அளவு: 21×15 சமீ.
இத்தொகுதியில் நிறம் மாறிய நிமிஷங்கள், விருந்து, மெழுகுவர்த்தி, குடைநிழலில், திசை மாற்றிய அலை, பனிமூட்டம், தோற்றுப்போன வாழ்க்கை, மௌனமாய் ஒரு, சுவனத்துப் பெருநாள், ஹதியா, அவளுக்கும் தான் புரியவில்லை, நிறம் தெரியாத அத்திபாரங்கள், மல்லிகை இதயம், பெறுமதி, உன்னைச் சொல்லிக் குற்றமில்லை, சுவை, கரையைத் தாண்டும் அலைகள், பாறைப் பூக்கள் ஆகிய பதினெட்டு கதைகள் இடம்பெற்றுள்ளன. இச்சிறுகதைகளில் பதினைந்து கதைகள் முன்னர் “அல்ஹஸனாத்” இதழ்களில் பிரசுரமானவை.