16702 மனுஷி : சிறுகதைகள்.

சண். தவராஜா. திருச்சி 620 003: இனிய நந்தவனம் பதிப்பகம், எண் 17, பாய்க்காரத் தெரு, உறையூர்,  1வது பதிப்பு, ஜீலை 2020. (சென்னை: கப்பிட்டல் பிரிண்டர்ஸ்).

ix, 10-80 பக்கம், விலை: இந்திய ரூபா 100.00, அளவு: 21.5×14 சமீ., ISBN: 978-81-944044-7-7.

இத்தொகுப்பில் மனுஷி, நெஞ்சு பொறுக்குதில்லையே, காட்டிக் கொடுப்பு, நோய், இரை, வண்டியும் ஒரு நாள் ஆகிய தலைப்புகளில் எழுதப்பட்ட ஆறு சிறுகதைகள் இடம்பெற்றுள்ளன. மனுஷி என்ற கதை புகலிட வாழ்வில் பெண்களின் சமூக நிலையை விபரிப்பதாக அமைகின்றது. எஞ்சிய கதைகள் அனைத்தும் ஈழத்தின் போர்க்கால வாழ்வியலைப் பேசுகின்றன. சமூக செயற்பாட்டாளரான ஊடகவியலாளர் சண்.தவராஜா சுவிற்சர்லாந்தில் புலம்பெயர்ந்து வாழ்கின்றார். திருச்சி இனிய நந்தவனம் பதிப்பாக வெளியான மனுஷி சிறுகதை நூல் சேலம் தமிழ்ச் சங்கம், கம்பம்- பாரதி கலை இலக்கிய மன்றம் ஆகியவை நடத்திய போட்டிகளில் 2020 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூலுக்கான பரிசுகளை வென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஏனைய பதிவுகள்

9552 சிறுவர் கட்டுரை மாலை: ஆண்டு 4-5.

த.நாகேஸ்வரன். சாவகச்சேரி: க.சிவசங்கரநாதன், உரிமையாளர், சிவம் மெடிக்கல்ஸ் ஸ்ரோர்ஸ் அன் புத்தகசாலை, 1வது பதிப்பு, ஒக்டோபர் 1994. (சாவகச்சேரி: து.பீற்றர், உரிமையாளர், அ.ரா.ச. அச்சகம்). 36 பக்கம், விலை: ரூபா 24.50, அளவு: 20.5×14

16878 லண்டன் தமிழர் தகவல்: ஆறு திருமுருகனின் 50ஆவது அகவை பொன்விழா மலர்.

குலமணி (ஆசிரியர்), நா.சிவானந்தசோதி (பதிப்பாசிரியர்). கென்ட், பிரித்தானியா: நா.சிவானந்தசோதி, திருமுருகன் அறிவகம், 41, Haddington Road, Bromley,Kent BR1 5RG, 1வது பதிப்பு, மே 2011. (லண்டன்: அச்சக விபரம் தரப்படவில்லை). 72 பக்கம்,