16705 யாழ்ப்பாணத்தான்: 23 சிறுகதைகள்.

பொன்.குலேந்திரன். கனடா: குவியம் வெளியீடு, 2796, Keyness Crescent, Mississauga, Ontario, L5N3A1, 1வது பதிப்பு, ஜீன் 2020. (மின்நூல் வடிவம்).

168 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20.5ஒ14.5 சமீ.

யாழ்ப்பாண மாவட்டத்தைப் பின்னணியாக வைத்து எழுதப்பட்ட சிறுகதைகள் இவை. புதுச் சுருட்டு, வேலி, முடிவு, சகுனம், கோவில் பிரவேசம், ஆணாதிக்கம், வேள்வி, குளைக்காட்டான் குஞ்சன், நன்கொடை, சீட்டு, மாற்றுத் திருமணம், விவசாயி, சிவப்பு நாடா, பென்சன், சின்னமேளம் சந்திரவதனி, சந்திக்கடை சங்கரப்பிள்ளை, சண்முகம் சம்மரி (விடுதி), கண்ணம்மா, ஓடிப்போனவள், தையல்நாயகி, முத்து வளவு, குடிமகனின் மகன், என் அப்பு அச்சி ஆகிய தலைப்புகளில் எழுதப்பட்ட 23 சிறுகதைகள் இத்தொகுதியில் அடங்கியுள்ளன. இக்கதைகளின் அடிநாதமாக யாழ்ப்பாணத்தின் தேச வளமை உள்ளது. கதைகளினூடு அவ்வப் பிரதேசங்களின் புவியியல் வரலாற்றுப் பின்புலன்களையும் ஆசிரியர் ஆங்காங்கே குறிப்பிடுகிறார். யாழ்ப்பாணப் பேச்சு வழக்கையோ, நடைமுறை வாழ்வில் மேற்கொள்ளும் சொல்லாடல்களையோ கதையில் குறிப்பிடும் போது இயன்றவரை விளக்கக் குறிப்பும் தருகிறார்.

யாழ்ப்பாணத்தான்: 23 சிறுகதைகள்.

பொன்.குலேந்திரன். பருத்தித்துறை: ஜீவநதி வெளியீடு, கலையகம், சாமணந்தறை ஆலடிப் பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, டிசம்பர் 2020. (பருத்தித்துறை: பரணீ அச்சகம், நெல்லியடி).

x, 223 பக்கம், விலை: ரூபா 700., அளவு: 21.5×14.5 சமீ.

இத்தொகுப்பில் பொன்.குலேந்திரனின் 23 சிறுகதைகள் இடம்பெற்றுள்ளன. புதுச் சுருட்டு, வேலி, முடிவு, சகுனம், கோவில் பிரவேசம், ஆணாதிக்கம், வேள்வி, குளைக்காட்டான் குஞ்சன், நன்கொடை, சீட்டு, மாற்றுத் திருமணம், விவசாயி, சிவப்பு நாடா, பென்சன், சின்னமேளம் சந்திரவதனி, சந்திக்கடை சங்கரப்பிள்ளை, சண்முகம் சம்மரி (விடுதி), கண்ணம்மா, ஓடிப்போனவள், தையல் நாயகி, முத்து வளவு, குடிமகனின் மகன், என் அப்பு ஆச்சி ஆகிய தலைப்புகளில் இவை எழுதப்பட்டுள்ளன. இந்நூல் 152ஆவது ஜீவநதி வெளியீடாக வெளிவந்துள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 70056).

ஏனைய பதிவுகள்

14271 நவீன அரசியற் கோட்பாடுகள்.

அ.சிவராசா. யாழ்ப்பாணம்: பட்டப் படிப்புகள் கல்லூரி, 148/1, ஸ்ரான்லி வீதி, 1வது பதிப்பு, 1989. (சுன்னாகம்: திருமகள் அழுத்தகம்). viii, 176 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×14 சமீ. இந்நூல் அரசறிவியலின் இயல்பும்