தாட்சாயணி (திருமதி பிரேமினி பொன்னம்பலம்). பருத்தித்துறை: ஜீவநதி வெளியீடு, கலையகம், சாமணந்தறை ஆலடிப் பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, டிசம்பர் 2021. (பருத்தித்துறை: பரணீ அச்சகம், நெல்லியடி).
124 பக்கம், விலை: ரூபா 400., அளவு: 21×14.5 சமீ., ISBN: 978-624-5881-24-6.
இந்நூலில் ஒரு உறவின் வெட்டுமுகம், திருப்தி, சூன்யம், பலி, மழை விட்டும் தூவானம், அடையாளம், காத்திருப்பு, ராணியம்மா, உனக்கு மட்டம் தானா, கருகல், தவிப்பு, குழந்தைகள் தெரு, வலி, பாசி, தொலைந்து பொனவை, கனவுகளின் கீதம் ஆகிய 16 சிறுகதைகள் இடம்பெற்றுள்ளன. ”தாட்சாயணியின் சிறுகதைகளில் பெண்ணியச் சிந்தனைகளும்பெண்மையின் உணர்வுகளும் மேலோங்கி வெளிப்படும். இந்நூலிலும் கூடஅது சாத்தியமாகியுள்ளது. உணர்வுச் சுழிப்புகளின் விபரிப்பினூடாக மனித மனம் படும் தயரங்களையும் பதைப்புகளையும் இச்சிறு கதைகளில் தாட்சாயணி படம்பிடித்துக் காட்டியுளள்ளார். போரும் ஆழிப் பெரலையும் மனித வாழ்வில் ஏற்படுத்திய அவலங்களும் காதலின் பிரிவு தரும் வேதனையும் பெண்மையின் ஏக்கமும் இச்சிறுகதைகளில் கருப்பொருள்களாகியுள்ளன.” (கலாநிதி த.கலாமணி, பின்னட்டைக் குறிப்பிலிருந்து). இது 207ஆவது ஜீவநதி வெளியீடாக வெளியிடப்பட்டுள்ளது.