16712 விரல்களிலும் வேர் முளைக்கும்.

யாழ். மருதன் (இயற்பெயர்: அ.வினோத்). யாழ்ப்பாணம்: அ.வினோத், மருதங்கேணி வடக்கு, வடமராட்சி கிழக்கு, 1வது பதிப்பு, ஜனவரி 2023. (வவுனியா: விஜய் அச்சுப் பதிப்பகம், 172 மில் வீதி).

xiv, 111 பக்கம், விலை: ரூபா 650., அளவு: 20.5×14.5 சமீ., ISBN: 978-624-99861-0-7.

இச்சிறுகதைத் தொகுப்பில் யாழ் மருதன் எழுதிய புள்ளினம் ஓலமிடுகிறது, நான் அப்பா, சமூகக் கொலை, கடைசி மீன், பெஸ்ரி, முதற்படி, உப்புக்காடு, ஆண்சிறை, முக்கியத்துவம், சிவப்பி, கூச்சல், பேசத்துணிந்தவர்கள் பேசுங்கள் ஆகிய கதைகள் இடம்பெற்றுள்ளன. வடமராட்சி கிழக்கின் மண்வாசனையில் தவழ்ந்து இலக்கிய உலகில் சஞ்சரித்துக்கொண்டிருக்கும் அ.வினோத், தொகுத்து வழங்கும் முதலாவது சிறுகதைத் தொகுப்பு இது. இன்றைய சமூகத்தின் போக்கு, மாற்றம் எனும் பெயரால் எதிர்கால சமூகம் சந்திக்கக்கூடிய சவால்கள் மற்றும் சமகால சமூகம் எதிர்பார்த்திருக்கும் வினைத்திறன் மிக்க மாற்றம் முதலான புதிய தேடல்களை இக்கதைகள் சித்திரிக்கின்றன.

ஏனைய பதிவுகள்

16069 மனையடி சாஸ்திரமும் வாஸ்து நிலையும்.

செ.லோகராஜா. மட்டக்களப்பு: திருமதி பரமேஸ்வரி லோகராஜா, 14/3, A-4, கணக்குப்பிள்ளை வீதி, நாவற்குடா, 1வது பதிப்பு, மாசி 2017. (திருக்கோணமலை: அஸ்ரா கிராபிக்ஸ்).  xxviii, 79 பக்கம், விலை: ரூபா 300., அளவு: 17×12