16716 ஜனனம்.

பார்த்திபன். மேற்கு ஜேர்மனி: Sud Asien Buro, Kiefernatr 45, 5600, Wuppertal 2, 1வது பதிப்பு, ஓகஸ்ட் 1986. (கல்லச்சுப் பிரதி).

40 பக்கம், சித்திரங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 19×15 சமீ.

ஜனனம், பாதியில் முடிந்த கதை, கற்பு ஆகிய தலைப்புகளில் எழுதப்பட்ட கதைகள். இக்கதைகளுக்கான ஓவியங்களை ஓவியர் ரமணி வரைந்துள்ளார். மேற்கு ஜேர்மனியில் வந்து குடியேறிய ஈழத்தமிழர்கள் தமது இலக்கியத் தொடர்பாடல்களுக்கு இத்தகைய வடிவமைப்பிலான கல்லச்சு நூல்களையே தொடக்கத்தில் பயன்படுத்தினர். அவையே ஆரம்ப வழிவகைகளாக இருந்தன. அவ்வகையில் புலம்பெயர் இலக்கிய வரலாறு பற்றிய தேடலை மேற்கொள்பவர்களுக்கு இத்தகைய ஆரம்பகால நூல்கள் முக்கிய வரலாற்றுச் சான்றுகளாகும்.

ஏனைய பதிவுகள்