16720 மறைந்த முகம்: சிங்களச் சிறுகதைகள்.

திக்குவல்லை கமால் (தமிழாக்கம்). பருத்தித்துறை: ஜீவநதி வெளியீடு, கலையகம், சாமணந்தறை ஆலடிப் பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, டிசம்பர் 2022. (பருத்தித்துறை: பரணீ அச்சகம், நெல்லியடி).

84 பக்கம், விலை: ரூபா 450., அளவு: 21×14 சமீ., ISBN: 978-624-5881-59-8.

இத்தொகுப்பில் ஒன்பது சிங்கள எழுத்தாளர்களின் சிறந்த சிறுகதைகள் இடம்பெற்றுள்ளன. ஒவ்வொரு கதையிலும் அதனதன் ஆசிரியர்களின் தனித்துவம் வெளிப்படுவதை அவதானிக்கலாம். வெவ்வேறு நோக்கு, போக்கு, உத்தி, உருவம் போன்றவற்றால் புது அனுபவச் சுவை தருகின்றன. தயாசேன குணசிங்ஹவின் “பேய்களின் இரவு”, விமலதாச முதாகேயின் “படைவீரனும் ரோஸியும்”, கீர்த்தி வெலிசரகேயின் “மறைந்த முகம்”, யசேந்திர ரணவக்கவின் “புத்திரக் கனவு”, டெனிசன் பெரேராவின் ‘மோப்ப ராகம்”, குணசேகர குணசோமவின் “சிநேகம்”, லீலானந்த விக்ரமசிங்ஹவின் “மனிதனும் மரமும்”, கமல் பெரேராவின் ‘சுமனக்கா”, பியதாஸ வெலிகன்னகேயின் “ஒரு விடிவெள்ளி” ஆகிய கதைகள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. இந்நூல் 238ஆவது ஜீவநதி வெளியீடாக வெளிவந்துள்ளது.

ஏனைய பதிவுகள்

16374 ஆற்றுகை 11-நாடக அரங்கியலுக்கான இதழ்: களம் 9, காட்சி 11, செப்டெம்பர் 2003.

ஆசிரியர் குழு. யாழ்ப்பாணம்: நாடகப் பயிலகம், திருமறைக் கலாமன்றம், 238, பிரதான வீதி, 1வது பதிப்பு, செப்டெம்பர் 2003. (யாழ்ப்பாணம்: ஹரிஹணன் பிரிண்டர்ஸ், 424, காங்கேசன்துறை வீதி). 72 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா