லதா உதயன். சென்னை 600093: பூவரசி வெளியீடு, இல.2, 2ஆவது தளம், 1ஆவது குறுக்குத் தெரு, புஷ்பா காலனி, சாலிகிராமம், 1வது பதிப்பு, ஜீலை 2022. (சென்னை 600093: பூவரசி வெளியீடு, புஷ்பா காலனி, சாலிகிராமம்).
208 பக்கம், விலை: ரூபா 800., அளவு: 22×14 சமீ., ISBN: 978-624-5020-04-9.
லதா உதயன் பருத்தித்துறையைப் பூர்வீகமாகக் கொண்டவர். தற்போது சுவிஸ் நாட்டில் 25 ஆண்டுகளாகப் புலம்பெயர்ந்து வாழ்ந்துவருகிறார். இவரது முதலாவது சிறுகதைத் தொகுப்பு “ஒரு நதியின் தேடல்” 2001இல் வெளிவந்தது. ”உன்னைச் சரணடைந்தேன்” என்ற நாவல் 2015இல் வெளிவந்தது. ”அக்கினிக் குஞ்சுகள்” இவரது இரண்டாவது நாவலாகும். ஈழ விடுதலைப் போராட்ட இலக்கியத்தில் மண்ணுக்காய் மாண்டவர்கள் மீதான பாடல்களும் கவிதைகளும் மிக முக்கியமானவை. ஒவ்வொரு மாவீரனும் மக்கள் மத்தியில் நாயக பிம்பத்தை தோற்றுவித்தவர்களே. பெரும் வீர தீரங்களை தமது சொந்த மண்ணில் நிகழ்த்திக் காட்டியவர்கள். தமிழ்மண்ணுக்காகவும் தன் இனத்திற்காகவும் இன்னுயிரை ஆகுதியாக்கியவர்கள். அக்கினிக் குஞ்சுகள் நாவலும் கிராமத்தில் உதித்த அந்த மாவீரர்களைப் பற்றிய காவியமாகின்றது. ராசா என்ற முதன்மைக் கதாபாத்திரத்தைச் சுற்றிக் கதை நகர்கின்றது. பூவரசி வெளியீட்டகத்தின் 228ஆவது பிரசுரமாக இந்நாவல் வெளிவந்துள்ளது.