16725 அம்மாவின் பிள்ளைகள்: குறுநாவல்கள்.

குரு அரவிந்தன். சென்னை 600017: மணிமேகலைப் பிரசுரம், தபால் பெட்டி எண் 1447, இல.7 (ப.எ.4), தணிகாசலம் சாலை, தியாகராய நகர், 1வது பதிப்பு, 2019. (சென்னை 94: ஸ்கிரிப்ட் ஆப்செட்).

xiv, 192 பக்கம், புகைப்படங்கள், விலை: இந்திய ரூபா 125., அளவு: 19×13 சமீ.

இந்நூலில் அந்த பதினெட்டு நாட்கள், தாயுமானவர், குமுதினி, அம்மாவின் பிள்ளைகள் ஆகிய நான்கு குறுநாவல்கள் இடம்பெற்றுள்ளன. இலங்கையில் நடந்த இனப்படுகொலையால் புலம்பெயர்ந்தோர் துயரை மையமாக கொண்டும், 2018ஆம் ஆண்டில் தாய்லாந்து நாட்டில், 18 நாட்கள் இருண்ட குகையில் வெள்ளத்தில் போராடியவர்களை மீட்டு, உலகின் கவனத்தை ஈர்த்த உண்மைச் சம்பவத்தையும் மையமாகக் கொண்டு குறுநாவல்களாக படைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இருந்து வெளிவரும் யுகமாயினி இதழ் நடத்திய அமரர் நகுலன் நினைவு குறுநாவல் போட்டியிலும் ஈழத்தமிழர்களின் சோகக் கதை சொல்லும் குரு அரவிந்தனின் ”அம்மாவின் பிள்ளைகள்” என்ற குறுநாவல் பரிசு பெற்றுப் பலரின் பாராட்டையும் பெற்றது. 2011இல் சர்வதேச ரீதியாக நடந்த தமிழகத்தில் இருந்து வெளிவரும் கலைமகள் குறுநாவல் போட்டியில் குரு அரவிந்தனின் ”தாயுமானவர்” என்ற குறுநாவல் இரண்டாவது பரிசைப் பெற்றிருக்கின்றது. புலம்பெயர்ந்த தமிழர்களின் பண்பாட்டுச் சின்னங்கள், புலம் பெயர்ந்த தமிழர்களின் மனக் குமுறல்கள் இவற்றை எல்லாம் வெளிப்படுத்தியதற்காக குரு அரவிந்தனின் ”தாயுமானவர்” குறுநாவலைத் தேர்வு செய்துள்ளதாக நடுவர்கள் குறிப்பிட்டனர். இந்நூலில் இடமபெற்றுள்ள அனைத்துக் கதைகளும் பரிசுக் கதைகளே.

ஏனைய பதிவுகள்

Beste norske online casinoer

Content Online casinobonuser: Prøv casinospill påslåt nett autonom Betalingsmetoder på nettcasino Historien bak casino inne i Norge Der, derimot for hver drøssevis andre jorde, eksistere