16726 அமார்க்க வாசம்.

அல் அஸீமத். வெல்லம்பிட்டிய: அல் அஸீமத், 50, கோத்தமி மாவத்தை, வெலேவத்த, 1வது பதிப்பு, டிசம்பர் 2020. (அச்சக விபரம் தரப்படவில்லை).

295 பக்கம், விலை: ரூபா 700., அளவு: 21×14.5 சமீ., ISBN: 978-955-52134-4-8.

1989இல் தினகரன்வார இதழில் சில மாதங்களாக வெளிவந்த தொடர்கதையின் நூல் வடிவம் இது. இலங்கைவாழ் முஸ்லீம்களின் ஒரு பகுதியை, கொழும்பையும் அதன் புறநகர்ப் பகுதியையும் களமாகக் கொண்டு, இங்கே வாழும் சாதாரண முஸ்லிம் மக்களையும் அவர்தம் வாழ்க்கையையும் தெரிந்துகொள்ள இந்நாவல் உதவும். இந்நாவலில் வரும் பாத்திரங்கள் ஒவ்வொன்றும் உயிர்த் துடிப்போடு, தத்ரூபமாக நாவலில் இயங்குகின்றன. அமார்க்க வாசத்தில் வரும் பாத்திரங்கள் ஒவ்வொன்றும் நாவலாசிரியரின் வீட்டுக் கதவைத் தட்டுவதோடு உள்ளேயும் புகுந்திருக்கின்றன. அல் அஸீமத்தின் வீடும் ஒரு முக்கிய பாத்திரமாகின்றது. இந்த வீடு, அங்குவந்து போவோர், அங்கே அவர்கள் நடந்துகொள்ளும் விதம், அங்கே நடக்கும் சம்பவங்கள் ஆகிய ஒவ்வொன்றும் ரசனை, சந்தோஷம், துக்கம், அவலம், ஆத்திரம், வெறுப்பு, இரக்கம், கருணை, நகைச்சுவை- இப்படிப் பலவித உணர்ச்சிகளையும் சுட்டுகின்றது. இந்நாவலில் வரும் பேச்சு வழக்கு கொழும்பிலும் அதன் புறநகர்ப் பகுதியிலும் வழங்கும் கொழும்புச் சோனகத் தமிழாகும்.

ஏனைய பதிவுகள்

Safer Web based casinos 2024

Blogs Is actually Pennsylvania Casinos on the internet Secure? Ways to get A lot more Out of your Bonuses Greatest Australian Internet casino Extra Also