16727 அர்ஜீன் பரீக்ஷித்.

ஆத்விகா பொம்மு. மட்டக்களப்பு: மகதீரா பதிப்பகம், திருமலை வீதி, 1வது பதிப்பு, டிசம்பர் 2020. (மட்டக்களப்பு: எஸ்.ஆர். மினேர்வா கிராப்பிக்ஸ்).

152 பக்கம், விலை: ரூபா 170., அளவு: 19.5×13.5 சமீ., ISBN: 978-624-97368-0-1.

 ”இனம்புரியா உறவிதுவோ” என்ற ஆசிரியரின் முன்னைய நாவலின் தொடர்ச்சியே இந்நாவலாகும். முதல் அத்தியாயத்தில் முன்கதைச் சுருக்கம் தரப்பட்டுள்ளது. மருகமணிச் சித்தர்  தீயோரிடமிருந்து உலகைக் காக்க ஒரு ”சுப்பர்மானை “ உருவாக்கும் முயற்சியில் பல மூலிகைகளை பயன்படுத்தி ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு வருகிறார். அத்தகைய ஒருவனை தன் மகளின் கருவில் சுமப்பதை விரும்பி அவளுக்கு நாள்தோறும் மூலிகைகளை உண்ணக்கொடுக்கிறார். அவளுக்குப் பிறக்கும் மகவு பெண்ணாக அமைந்து விடுகிறது. அவர் மூலிகைக் குறிப்புகளை ஏட்டில் எழுதிவைத்துவிட்டு இறந்துபோகிறார். தலைமுறை தாண்டி ஆண் வாரிசின்றித் தொடரும் புதிய தலைமுறையில் அச்சந்ததி வழியில் மனிஷாவுக்கு சுப்பர்மானை பிரசவிக்கும் சக்தி வந்தடைகின்றது. இவர்களுக்கு வில்லனாக வருகிறான் ”பிளாக் சீட்டா”. மனிஷாவின் வயிற்றில் காதலன் அபிமன்யுவுடன் கொண்ட உறவால் ஒருவாறாக ஆண்குழந்தை பிறக்கிறது. அவனே அர்ஜீன் பரீக்ஷிட். இந்த நாவலானது உலகை ஆளும் காவலனும் அதீத சக்திகளைக் கொண்டு பிறந்தவனுமான அர்ஜீன் பரீக்ஷிட் உடைய வீரம் மற்றும் பிராமணப் பெண்ணான உத்திராவுடனான அவனது காதல் என அனைத்தும் உள்ளடங்கி விஞ்ஞானமும் சித்தாந்தமும் கலந்து எழுதப்பட்ட நாவலாகின்றது.

ஏனைய பதிவுகள்

Pick Seafood On the web

Blogs Include a credit – south park casino It dense, creamy bisque are generally thought of as among the best fish soups you are going