16728 அவளுக்கென்று ஒரு மனம்.

சதாவதானி (இயற்பெயர்: அருண் செல்லப்பா). கனடா: அருண் செல்லப்பா, மார்க்கம், 1வது பதிப்பு, 2022. (யாழ்ப்பாணம்: தர்சா தமிழ் அச்சகம், ஆவரங்கால் சந்தி, அச்சுவேலி).

153 பக்கம், புகைப்படம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 22×16 சமீ., ISBN: 978-624-99215-1-1.

ஒரு கிராமத்தின் மாசறு தலைவன் என்று தன்னைக் கருதிக்கொள்ளும் ஒருவர் தனது பெயரும் புகழும் மாசுபடக் கூடாது என்பதற்காகத் தன் குடும்ப உறுப்பினர்களின் வாழ்வியலைப் பணயம் வைக்கும் சம்பவக் கோர்வையை இந்நாவல் படம்பிடித்துக் காட்டுகின்றது. அதர்மம் தர்மத்தை வெல்வது போலத் தோன்றினாலும் இடையிடையே பல இடையூறுகள் நிகழ்ந்தாலும், இறுதியில் தர்மமே வெல்கின்றது. எழுபதுகளில் சமூக ஏற்றத்தாழ்வு மலிந்திருந்த ஒரு காலகட்டத்தில் இக்கதை இடம்பெறுகின்றது.

ஏனைய பதிவுகள்