16733 இது புதிய ஆரம்பம்.

மு.தயாளன். மட்டக்களப்பு: மகுடம் பதிப்பகம், இல. 90, பார் வீதி, 1வது பதிப்பு, மே 2022. (மட்டக்களப்பு: வணசிங்க அச்சகம், 496யு, திருமலை வீதி). 

82 + 50 பக்கம், விலை: ரூபா 400., அளவு: 19.5×13 சமீ., ISBN: 978-624-5849-20-8.

மகுடம் பதிப்பகத்தின் 54ஆவது வெளியீடாக இந்நூல் வெளிவந்துள்ளது. நாவலின் கதைக்களம் லண்டன் மாநகராகும். புலம்பெயர் நாடுகளில் தமிழ்க் குடும்பங்களில் ஏற்படுகின்ற மிக முக்கியமான பிரச்சினையான வயோதிபர் இல்லத்திற்கு தமது பெற்றோரை அனுப்புதல் தொடர்பாகவும், முதுமையான காலத்தில் அவர்களுக்குத் தேவைப்படும் பராமரிப்பு, பாதுகாப்பு, தொடர்பில் விரிவாகவும் மிக யதார்த்தமாகவும் இந்நாவல் பேசுகின்றது. “ஊர் என்ன சொல்லுமோ உறவென்ன பேசுமோ” என்ற மனநிலையில் வாழும் தமிழ் சமூகம் முடிவெடுக்கத் தடுமாறுவதை இந்நாவல் இயல்பாகப் படம்பிடித்துக்காட்டுகின்றது. இந்நாவலின் ஆங்கில வடிவம் இதே நூலில் மறுவளமாக 50 பக்கங்களில் The New Beginning என்ற பெயரில் அச்சிடப்பட்டுள்ளது.

ஏனைய பதிவுகள்

Book Of Ra Deluxe Spielen

Content Novoline Spielautomaten Kostenlos Vortragen Book Of Ra Book Of Ra Deluxe Online Kostenlos Vortragen Allgemeine Aussagen Zu Book Of Dead Für nüsse Book Of