16735 இரத்த வடுக்கள் (சமூக நாவல்).

செ.கணேசலிங்கன். சென்னை 26: குமரன் பதிப்பகம், 12/3 மெய்கை விநாயகர் தெரு, குமரன் காலனி 7வது தெரு, வடபழனி, 1வது பதிப்பு, ஜீலை 2013. (சென்னை 26: குமரன் பதிப்பகம், 12/3 மெய்கை விநாயகர் தெரு).

176 பக்கம், விலை: இந்திய ரூபா 70.00, அளவு: 18×12.5 சமீ.

சாவித்திரியும் சித்திராவும் கல்லூரித் தோழியர். ஆசிரிய பதவியுடன் திருமணமான குழந்தைகளுடன் கிராமத்தில் வாழ்கின்றனர். சாவித்திரி எதிர்பாராது கணவருடன் உயிரச்சப் பயங்கர நிலையில் அகப்பட்டுக் கொண்டனர். விடுதலை பெற்றது சார்ந்த பல்வேறு கதைகள் அவர்களுடையவை. கிராமத்தை விட்டு நகரத்துக்குப் பெயர்கின்றனர்.  தோழி சித்திரா கடிதங்கள் மூலம் நடந்த உண்மைக் கதையை அறிய முயல்கிறாள். அத்துடன் பெண்ணியக் கருத்துக்களும் ஆராயப்படுகின்றன. கல்லூரியில் கற்ற நடேசனின் கருத்துகள் முதன்மை பெறுகின்றன. பெண்களின் வாழ்வு இன்றைய சமூகத்துடன் பிணைக்கப்பட்டுள்ளதை அவனும் ஏற்கிறான். இத்துன்பத்தில் இயற்கை ஓரவஞ்சம் செய்ததா என்ற கருத்தும் ஆராயப்படுகின்றது. நடேசனின் விளக்கம் பரந்த உலகிற்கு விளக்கம் கூறுவதாக இருப்பது அவர்களைத் திணற அடிக்கின்றது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 56208).

ஏனைய பதிவுகள்

14352 கற்க கசடற: அமரர் ஆறுமுகம் தில்லைநாதன் நினைவுமலர்.

தில்லைநாதன் கோபிநாத். கொழும்பு 13: தில்லைநாதன் கோபிநாத், 90/3, புதுச்செட்டித் தெரு, 1வது பதிப்பு, நவம்பர் 2011. (அச்சக விபரம் தரப்படவில்லை). 56 பக்கம், புகைப்படம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×14 சமீ. அமரர்

12840 – திருக்குறள் (பொழிப்புரை).

சொக்கன் (இயற்பெயர்: க.சொக்கலிங்கம்), வரதர் (இயற்பெயர்: தி.ச.வரதராசன்). யாழ்ப்பாணம்: ஸ்ரீ சுப்பிரமணிய புத்தகசாலை, 235, காங்கேசன்துறை வீதி, 1வது பதிப்பு, மாசி 2001. (யாழ்ப்பாணம்: ஸ்ரீ சுப்பிரமணிய அச்சகம், 63, B.A.தம்பி லேன்). viii,