16739 ஒரு கிராமம் மாறுகிறது (நாவல்).

பொன்.குலேந்திரன். கனடா: குவியம் வெளியீடு, 2796, Keyness Crescent, Mississauga, Ontario, L5N3A1, 1வது பதிப்பு, நவம்பர் 2021. (மின்நூல் வடிவம்).

142 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20.5×14.5 சமீ.

இந்தக் கதை 1948இற்கு முன் பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்திலும் அதன் பின் 1948இல் இலங்கைக்கு சுதந்திரம் கிடைத்த பின்னும் யாழ்ப்பாணக் குடாநாட்டின் வலிகாமம் வடக்கில் உள்ள சுன்னாகம் என்ற கிராமத்தில் நடந்த சமூக, பொருளாதார மாற்றங்களை பின்னணியாகக் கொண்டது. சுன்னாகத்தில் பிறந்து வளர்ந்த ஜீவன் இலங்கையில் வைத்தியராகப் பணியாற்றி இனக்கலவரம் காரணமாக கனடாவுக்குப் புலம்பெயர்ந்து  அங்கு ஒருவரைத் திருமணம் புரிந்து இரு குழந்தைகளுக்குத் தந்தையாகிறார். சுமார் 50 வருடங்களுக்குப் பின்னர் தாய்நாட்டுக்குத் திரும்பும் அவர், தான் விட்டுச்சென்ற மண்ணையும் அதன் இன்றைய சூழலையும் ஒப்பிட்டுப் பார்ப்பதாக கதை நகர்கின்றது. ஊரில் தனது பூர்வீக வீட்டில் ஒரு முதியோர் இல்லத்தை உருவாக்க முனையும் ஜீவனின் அனுபவங்கள் கதையை சுவாரஸ்யமாக்குகின்றன. பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ், முகாந்திரம் முருகேசு, நல்ல நாச்சியார், குடிமகன்கள், சுன்னாகம் கிராமம், ஊருக்குப் பயணம், வக்கீல் ராஜன், மார்கோசா கிரீன் லொட்ஜ், கண்ணகி கோவில், கிராமத்துச் சுடலை, சுன்னாகச் சந்தை, சந்திப்புகள், செல்லாச்சி, கணித மாஸ்டர் கணபதி, நாடகக் கலைஞர் சிவலிங்கம், ரதிதேவி, ரிப்போர்ட்டர் தில்லைநாதன், ஆசிரியர் சுந்தரலிங்கம், சிவலிங்க சுவாமிகள், ஜீவன் படித்த கல்லூரி, கீரிமலை, உயில், டாக்டர் ரஷீட், கொழும்பு சந்திப்புகள், கனடாப் பயணம் ஆகிய 25 அத்தியாயங்களில் இந்நாவல் எழுதப்பட்டுள்ளது.

ஏனைய பதிவுகள்

No deposit Incentives 2024

Posts The different Sort of Video slot Extra Rounds Possibilities to Victory and Brief Strike Position Jackpot: 200 Ways to Winnings And you will 250x