16740 ஒரு தேசிய எழுச்சி (சமூக நாவல்).

செ.கணேசலிங்கன். சென்னை 26: குமரன் பதிப்பகம், 12ஃ3 மெய்கை விநாயகர் தெரு, குமரன் காலனி 7வது தெரு, வடபழனி, 1வது பதிப்பு, 2019 (சென்னை: சிவம்ஸ்).

136 பக்கம், விலை: இந்திய ரூபா 70.00, அளவு: 18×12.5 சமீ.

தேசியம், தேசிய எழுச்சி உலகில் எழுந்த காலம் 200 ஆண்டுகளே. முதலாளித்துவம் என்ற சமூக அமைப்பும் எழுந்து இரண்டு நூற்றாண்டுகளே ஆகின்றன. இது பலரையும் வியப்புக்குள்ளாக்கலாம். மக்கள் ஏற்படுத்திய சில சமூக அமைப்புகளே தேசிய உணர்ச்சியையும் புதிய எழுச்சியையும் ஐக்கியப்படுத்தியது எனலாம். சிறப்பாக, பயிர், உணவு உற்பத்தி, உயிர் வாழ முதன்மை பெறுவது, அதற்காக நிலம், நீர் வேண்டுவது, கல்வியும் அறிவு வளர்ச்சியும், மக்கள் தொடர்பு மொழியும் சமய நம்பிக்கையை ஏற்படுத்தும் ஒற்றுமையும் தேசிய எழுச்சிக்கு துணை புரிவதாகும். தாய் மொழி வளர்ச்சி, நவீன அச்சக வளர்ச்சி, பொழுதுபோக்கிற்காகவும், மேம்பட்ட ஆடல், பாடல், விளையாட்டுகள் எனவும் விரியும். இவை ஏற்படுத்தும் ஐக்கியம், ஆர்வம், தேசிய எழுச்சிக்கு உரமாகும். இவற்றை பண்பாடு எனவும் கூறலாம்.  இவற்றைக் காப்பாற்ற, மேம்படுத்த மக்கள் தமது உயிரைக் கொடுப்பது மட்டுமல்ல, எதிர்ப்பவரின் உயிர்க் கொலைக்கும் தயாராவது வியப்பே. அத்தகைய போராட்டத்தை இந்நூலும் கூற முயல்கிறது.

ஏனைய பதிவுகள்