செ.கணேசலிங்கன். சென்னை 26: குமரன் பதிப்பகம், 12/3 மெய்கை விநாயகர் தெரு, குமரன் காலனி 7வது தெரு, வடபழனி, 1வது பதிப்பு, ஒக்டோபர் 2018 (சென்னை: சிவம்ஸ்).
160 பக்கம், விலை: இந்திய ரூபா 70.00, அளவு: 18×12.5 சமீ.
ஆசிரியை செல்லம்மா கிரேக்க ஹாடொசியம் எனும் இன்பக் கோட்பாட்டை மாணவி தவமணிக்கும் கூறுவார். ஆயினும் தவமணி மேலே கற்பதைத் துறந்து தனது தேவாலய பாதிரியாரின் வற்புறுத்தலுடன் தோமஸை மணக்கிறாள். இரண்டு பிள்ளைகளுடன் 15 ஆண்டுகள் கழித்து தன்ஆசிரியை செல்லம்மாவிடம் வருகிறாள். வாழ்வு இன்பமல்ல, அதனால் நான் துன்பப்பட்டேன் என முறையிடுகிறாள். பாதிரியாரிடம் சென்று கணவர் குடி, கூத்தி தொடர்புள்ளவன் என முறையிட்டபோது, இரண்டு பிள்ளைகள் பெற்றாயே, கர்த்தரின் ஆசீர்வாதத்தால் இன்பமும் பெற்றாய் என்பார். தன் ஏமாற்றத்தை செல்லம்மாவிடம் கூறியபோது, பெண்களே இன்ப வழியைத் தீர்மானிக்க வேண்டும் என செல்லம்மா புதிய வழியினை ஏற்பாடு செய்வார். ஆண்கள் பெண்களை அடிமைப்படுத்தும் நிலையில் வாரிசு மகப்பேற்றுக்கு மட்டுமே இன்பம் என அவர்களை ஏமாற்றுவர். இது வியப்பல்ல. ரிச்சர்ட் மேல்நிலைக் கல்வியோடு “யேசுவைக் கற்றல்” விவாதத்தில் யேசுவின் சிலுவைக் கொலைத் தண்டனை மர்மமானது என விவாதிப்பான். மேலும், கணநேர காமகோபம் மன்னிக்கப்படவேண்டும் என்றும் இயேசு அறியாமையில் செய்த சிலுவைக் கொலையை மன்னிக்கும்படி தேவனை வேண்டினார் என்றும் கூறுவான். கண நேர காமகோபச் செயல்களும் மன்னிக்கப்படவேண்டும் என மற்றும் பேராசிரியருடனும் ரிச்சர்ட் விவாதிப்பான்.