16747 குறுந்தொகை பேசாத பெருந்தோகை அழகியே.

இலண்டன் கீர்த்தி (இயற்பெயர்: கீர்த்திசிங்கம் குமரேஸ்வரன்). சென்னை 600017: மணிமேகலைப் பிரசுரம், 7, தணிகாசலம் சாலை, தியாகராய நகர், 1வது பதிப்பு, 2021. (சென்னை: ஆதிலட்சுமி கிராபிக்ஸ்;).

210 பக்கம், விலை: இந்திய ரூபா 180.00, அளவு: 23×15 சமீ.

கணிதவியல், கணக்கியல் பட்டதாரியான கீர்த்தி யாழ்ப்பாண மாவட்டத்தில் இளவாலைக் கிராமத்தைச் சேர்ந்தவர். 2019ஆம் ஆண்டின் இறுதிக் கட்டத்தில் ஆரம்பித்த கொரோனா எனும் கொடிய நோய் உலகையே மிரட்டிக்கொண்டிருந்த வேளை அதன் அனுபவத்தின் துணைகொண்டு இந்நாவலை ஆசிரியர் எழுதியிருக்கிறார். முழுமையான கற்பனைக் கதையான போதிலும் தன் வாழ்க்கையில் ஆங்காங்கே கண்ட, கேட்ட, அறிந்த சேதிகளுடன் இக்கதையை நகர்த்திச் சென்றுள்ளார். ஒரு காலகட்ட நிகழ்வினை இந்நாவல் காலக்கண்ணாடியாகப் பதிவுசெய்கின்றது.

ஏனைய பதிவுகள்

16342 கிராமப்புறச் சமையல் கலையின் நுட்பங்கள்: பகுதி 1.

அருந்ததி துரைராஜா. கொழும்பு 6: திவ்யா கலைக்கூடம், 351-7A, 1/1 காலி வீதி, வெள்ளவத்தை, 2வது பதிப்பு, 2014, 1வது பதிப்பு, ஆடி 2012. (அச்சக விபரம் தரப்படவில்லை). ix, 70 பக்கம், புகைப்படம்,