16748 கொச்சிக்கட vs கும்மிடி பூண்டி (நாவல்).

ஈழவாணி. சென்னை 600093: பூவரசி வெளியீடு, இல.2, 2ஆவது தளம், 1ஆவது குறுக்குத் தெரு, புஷ்பா காலனி, சாலிகிராமம், 1வது பதிப்பு, ஜனவரி 2020. (சென்னை 600093: பூவரசி வெளியீடு, புஷ்பா காலனி, சாலிகிராமம்).

224 பக்கம், விலை: இந்திய ரூபா 250., அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 978-624-5018-03-1.

ஈழவாணி வவுனியாவில் பிறந்தவர். தனது ஆரம்பக் கல்வியை வவுனியா றம்பைக்குளம் தேசிய மகளிர் கல்லூரியிலும், உயர் கல்வியை கொழும்பு பல்கலைக் கழகத்திலும், முதகலை ஊடகக் கல்வியை சென்னை அழகப்பா பல்கலைக் கழகத்திலும் பயின்றவர். பல ஆவணப்படங்களையும் குறும்படங்களையும் விளம்பரப் படங்களையும் தயாரித்து இயக்கியிருக்கிறார். நூலுருவில் வெளிவந்த இவரது முதலாவது நாவல் இது. ஏற்கெனவெ  மூன்று சிறுகதைத் தொகுப்புகளையும்,ஐந்து கவிதைத் தொகுப்புகளையும், மூன்று ஆய்வு நூல்களையும், காப்பு என்ற இலக்கியத் தொகுப்பினையும் வெளியிட்டுள்ளார். இறுதி யுத்தத்துக்கு பின்பு சில ஆண்டுகள் கழித்து இந்தியாவிலிருந்து இலங்கைக்குள் ஒரு குழந்தையோடு பயணம் செய்யும் ஒரு பெண்ணின் வழியே முன் பின்னான தமிழ் மக்களின் வாழ்வை இந்த நாவல் வழியே பதிவு செய்கிறார் ஈழ வாணி. இது ஈழத்தின் அகதி வாழ்வு பற்றியும் போரின் எச்சமாகவுள்ள பல்வேறு நிலைமைகள் பற்றியும் பதிவு செய்கிறது. தமிழகத்தில் ஈழத்தமிழ் அகதிகளின் அவல வாழ்வு புள்ளிவிபரங்களுடன் துணிச்சலாகச் சொல்லப்பட்டுள்ளது. கொச்சிக்கட ஈஸ்ரர் தாக்குதலின் பின்னணியில் இந்நாவல் பயணிக்கின்றது. உண்ணாவிரத நாடகம், முத்துக்குமாரின் தியாகம், கதிர்காமத்தில் புத்தர், மடுவின் அகதி வாழ்வு, போரின் முடிவு தமிழரை கடல் வழியாக அவுஸ்திரேலியா நோக்கி  நகரத் தூண்டியது எனப் பல்வேறு விடயங்களை இந்நாவலில் காணமுடிகின்றது. கொச்சிக்கடை அந்தோனியார் ஆலய வரலாறும் ஆங்காங்கே பதிவுசெய்யப்பட்டுள்ளமையும் ஆசிரியரின் ஊடகவியல்துறைசார் அனுபவத்தின் வெளிப்பாடாக அமைகின்றது. கதையின் நாயகியான கானவியின் வாழ்க்கையில் நிகழும் பல சம்பவங்களினூடு கதை நகர்கின்றது. பூமணி ஆச்சி, லட்சுமி, யாழி ஆகியோர் நாவலின் பிற முக்கிய பாத்திரங்கள். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 69966).

ஏனைய பதிவுகள்

Casino Classic Rewards

Content Genuine Promos and Bonuses: la cucaracha online uk Players Struggling To Complete Account Verification Most Popular Slot Game Providers There’s hundreds of game choices