16752 சிறையில் ஒரு சிற்றோவியம் (நாவல்).

நிவேதா ஜெகநாதன். கொழும்பு 13: நிவேதா ஜெகநாதன், கொட்டாஞ்சேனை, 1வது பதிப்பு, நவம்பர் 2021. (கொழும்பு 13: கே.எஸ்.கே.பிரின்டர்ஸ், 179, பிக்கரிங்ஸ் வீதி, கொட்டாஞ்சேனை).

ix, 129 பக்கம், விலை: ரூபா 400., அளவு: 21.5×15.5 சமீ., ISBN: 978-624-98637-0-5.

மலையக இளம் படைப்பாளர்களுள் ஒருவரான நிவேதா ஜெகநாதன் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் பட்டதாரியாவார். அத்துடன் கொழும்புத் தமிழ்ச் சங்கத்தின் தமிழ்ப் பாடப் பிரிவில் பட்டயக் கல்வி கற்றுவரும் மாணவியுமாவார். ரு.வு.ஏ தொலைக்காட்சியில் செய்திவாசிப்பாளராகப் பணியாற்றுகின்றார். தாய்மையின் உணர்வுகளுக்குப் புத்துயிர் வழங்கும் இந்நாவலில் எமது சமூகத்தில் குழந்தைகள் இல்லாத பெற்றோர் எதிர்கொள்ளும் சிக்கல்களை, அவர்கள் படும் இம்சைகளை தெளிவாகப் பதிவுசெய்திருக்கிறார். மத, இனத் தடைகளைத் தாண்டித் திருமணம் செய்யும் தம்பதியர் சந்திக்கும் பிரச்சினைகளுக்கு மேலாக இந்தப் புத்திர பாக்கியமின்மை மற்றுமொரு பிரச்சினைக்கு வித்திடுகின்றது. இறுதியில் குழந்தைப் பாக்ககியம் பெறுவதாகக் கதை முடிக்கப்பட்டிருந்தாலும், கதை முழுவதும் அத்தம்பதியர் சந்திக்கும் மன அவலங்களே கதையில் விரிவாகப் பேசப்படுகின்றன.

ஏனைய பதிவுகள்

bellagio casino restaurants

Cryptocurrency exchange Cryptocurrency r Bellagio casino restaurants De volledige cryptocurrency-markt — nu meer dan $300 miljard waard — is gebaseerd op het idee achter Bitcoin: