16755 சொல்லத்தான் நினைக்கிறேன்.

சதாவதானி (இயற்பெயர்: அருண் செல்லப்பா). கனடா: அருண் செல்லப்பா, மார்க்கம், 1வது பதிப்பு, 2022. (யாழ்ப்பாணம்: மெகா பதிப்பகம், கச்சேரியடி).

244 பக்கம், புகைப்படம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21.5×16 சமீ., ISBN: 978-624-99215-2-8.

1975களில் கொழும்புக்குச் செல்லும் ஒரு யாழ்ப்பாணத்து இளைஞனுக்கும் கல்கிசை நகரிலிருந்து வரும் ஒரு பௌத்த சிங்கள யுவதிக்கும் இடையே ஏற்படும் காதலே இக்கதையின் கருவாகும். இந்தத் தேடல் மிகுந்த காதல், இனம் மதம், மொழி பார்த்து வருவதில்லை. ஒருவர் மீது ஈர்ப்பு இருந்துவிட்டால் மட்டும் அது காதலாக மலர்ந்து விடுவதும் இல்லை. ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையில் இருந்த வயது வித்தியாசத்தை மையமாக வைத்துக் காதல் படும் பாட்டை இந்நாவல் சுவையாக விபரிக்கின்றது. மேலும் இதயத்தில் சிறைகொண்ட அவர்களது காதல், தொடர்ந்து வந்த 20 வருடங்களில் இலங்கையில் ஏற்பட்ட இனப்பிரச்சினை, விடுதலைப் போர், என பல்வேறு தடைகளையும் மீறி எவ்வாறு வாழ்கின்றது என்பதை இங்கு  கதையாகச் சொல்லியுள்ளார்.

ஏனைய பதிவுகள்

How come Slavic Women Are So Hot

Slavic women have a gentle personality and love attending to their families. They are often incredibly https://mailbride.net/best-mail-order-bride-sites/ passionate while having sex and are dedicated to