16756 சொல்லுங்கள் நீங்கள் மனிதர்களா?(ஐந்தறிவிகள் புதினம்).

இணுவில் ஆர்.எம்.கிருபாகரன். சென்னை 600017: மணிமேகலைப் பிரசுரம், 7, தணிகாசலம் சாலை, தியாகராய நகர், 1வது பதிப்பு, 2021. (சென்னை: பாலாஜி புக்ஸ்;).

164 பக்கம், விலை: இந்திய ரூபா 120.00, அளவு: 19×13.5 சமீ.

ஐந்தறிவு ஜீவராசிகளை கதாபாத்திரங்களாகக் கொண்டு எழுதப்பட்ட நாவல். இதில் மனிதப் பத்திரங்களே கிடையாது. மிருகங்கள், பறவைகள், ஊர்வன மற்றும் கடல்வாழ் உயிரினங்கள் என இக்கதாபாத்திரங்கள் தங்களது உள்ளக் குமுறல்களையும் மானிடத்தின் மீதான குற்றச்சாட்டுகளையும் இந்நாவலின் வழியாக வெளிப்படுத்துகின்றன. ஒரு மாநாட்டு அமர்வாக ஐந்து அமர்வுகளில் இந்நாவல் நிறைவுபெறுகின்றன. யாழ்ப்பாணம் இணுவிலைப் பிறப்பிடமாகக் கொண்ட கிருபாகரன் தனது 17ஆவது வயதில் ஊடகங்களில் எழுத ஆரம்பித்தவர். 35 வருடங்களாக கனடாவில் புலம்பெயர்ந்து வாழ்ந்து வருகிறார். இது இவரது பத்தாவது நூலாகும். ஏற்கெனவே நீறுக்குள் நெருப்பு (சிறுகதைத் தொகுதி 2007), இவர்கள் எப்போதும் விழுதுகள் (சமூக நாவல், 2009), வசந்தம் வரவேண்டும் (சமூக நாவல், 2013), கல்யாணிபுரத்துக் காவலன் (சரித்திர நாவல், 2014), இந்த மண்ணும் எங்கள் சொந்த மண் தான் (நாவல், 2015), எங்கே போய்விடும் காலம் (நாவல், 2016), நேற்று நான் இன்று நாம் (சமூக நாவல், 2017), கரீபியன் தீவுகளுக்கு இனிய கப்பல் பயணம் (பயணக்கதை, 2018), விழித்துக் கொண்டோம் வழி பிறந்தது (சமூக நாவல், 2020) ஆகிய நூல்களை இவர் வெளியிட்டுள்ளார். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 70497).

ஏனைய பதிவுகள்

Book Of Maya Kostenlos Vortragen

Content Diese Geschichte Bei Book Of Ra Tipps Unter anderem Strategien: Wirklich so Gewinnt Man In Book Of Ra 10 Angeschlossen Vermag Man Um Echtgeld