16759 தாமரை அறிவும் முரண்பாடும் (சமூக நாவல்).

செ.கணேசலிங்கன். சென்னை 600026: குமரன் பப்ளிஷர்ஸ், 3(12), மெய்கை விநாயகர் தெரு, குமரன் காலனி, 7வது  தெரு, வடபழநி, 1வது பதிப்பு, 2018. (சென்னை: சிவம்ஸ்).

160 பக்கம், விலை: இந்திய ரூபா 70.00, அளவு: 18×12.5 சமீ.

சரஸ்வதியும் தாமரையும் சகோதரியர். அரசு கல்லூரியில் இருவரும் கற்கிறார்கள். முகுந்தன் எதிர்பாராத சூழலில் இருவருடனும் நெருங்கிப் பழக நேர்கிறது. இதனால் சகோதரியரிடையே பகைமை தோன்றுகின்றது. மாலதி என்ற தோழி, சகோதரியர் இடையேயான பகைமை உறவை நீக்கியதோடு ஒற்றுமையை ஏற்படுத்துகிறாள். மாலதியின் நண்பன் சுந்தரம் “திருமணத்தின் மூலம் வீட்டில் ஒரு அடிமையை வைத்திருக்க முடியாது” என்பான். மாலதியும் “மணப்பதன் மூலம் வீட்டு அடிமையாக முடியாது”  என்று தன் கோட்பாட்டைக் கூறுவாள். இருவருக்குமிடையே புரிந்துணர்வு ஏற்படுகின்றது. நாள்தோறும் எட்டு மணி நேரமல்ல, 16 மணி நேரமும் தொடர்ச்சியாக உழைக்கும் பெண்களைப் பாட்டாளிகளாகக் கொள்ளப்படவேண்டும் என்றும், தனிச் சொத்தற்றவர்கள் இருட்டு, புகை, சூட்டில் உழைப்பவர் என்றும், பெண்களுக்கு முதுமையில் கட்டாய ஓய்வு தரப்படவேண்டும் என்றும் மாலதி கூறுகிறாள். அந்தக் கோட்பாட்டில் நூலொன்றை எழுத சுந்தரத்துடன் தான் பூனே செல்ல இருப்பதாகக் கூறுகிறாள். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 64846).

ஏனைய பதிவுகள்

Black-jack Game

Content Class Enjoy In order to choose, we’ve indexed the main brands you will find at the best on the web blackjack web sites inside