16761 நகுலாத்தை.

யதார்த்தன் (இயற்பெயர்: பிரதீப் குணரட்ணம்). கனடா: வடலி வெளியீடு, இல. 35, Long Meadow Road, Brampton, Ontario L6P 2B1, 1வது பதிப்பு, ஆவணி 2022. (அச்சக விபரம் தரப்படவில்லை).

480 பக்கம், விலை: இந்திய ரூபா 750., அளவு: 24.5×16 சமீ., ISBN: 978-1-7779375-3-9.

ஈழ நிலத்தின் போர் திரும்பத் திரும்ப எழுதப்பட்டுக் கொண்டிருந்தாலும், துயர்களைத் தின்று செரித்த நிலத்திடம் சொல்லுவதற்கு இன்னும் ஏராளம் கதைகள் உண்டு. வரலாறு முழுவதும் ஆக்கிரமிப்புகளின் போதெல்லாம் வீழ்வதும் பின் எழுவதுமாயிருக்கும் வன்னிக் கிராமமொன்றின் கதை இது. தொல் தெய்வங்களின் கருணையும் உக்கிரமும் உள்ளுறைந்திருக்கும் கதைகளும் மனிதர்களும் கொண்டு எழுதப்பட்டிருக்கும் யதார்த்தனின் முதல் நாவல். தொன்மத்தின் பாடல்களாலும் நம்பிக்கைகளாலும் பின்னப்பட்டிருக்கும் ஆதி நிலத்தின் நிகழ்கால மனிதர்களின் பாடுகளை, வைராக்கியத்தை, தியாகத்தை, வேட்கையை போர் ஊடறுத்த அன்றாடத்தை, எங்கள் மனமசையச் சொல்லுகின்றன யதார்த்தனின் சொற்கள். யாழ்ப்பாணத்தில், சரசாலைக் கிராமத்தில்  1993இல் பிறந்தவர் யதார்த்தன். எழுத்தாளர், சமூக செயற்பாட்டாளர், வரலாறு, மரபுரிமைகள், சாதியம் மற்றும் சமகாலப் பிரச்சினைகள் தொடர்பாகத் தொடர்ந்து எழுதி வருபவர். மரபுரிமைகள் தொடர்பான “தொன்ம யாத்திரை” இதழின் ஆசிரியர்களில் ஒருவர். யாழ்;ப்பாணப் பல்கலைக்கழகத்தின் மொழியியல் துறையில் தன்னுடைய இளமாணிப் பட்டப்படிப்பினை நிறைவுசெய்துள்ளார். பேராதனைப் பல்கலைக்கழகத்தில் சமூகவியல்துறையில் முதுமாணிப் பட்டப்படிப்பினைத் தொடர்ந்து வரகிறார். இவரது முதலாவது சிறுகதைத் தொகுதி “மெடூசாவின் கண்களின் முன் நிறுத்தப்பட்ட காலம்” 2017இல் வெளிவந்தது. “நகுலாத்தை” இவரது முதலாவது நாவலாகும்.

ஏனைய பதிவுகள்

» Tragamonedas Lucky Lady’s Charm

Content Simboluri Și Funcții Speciale Lucky Lady Charm | playtech juegos Casinobarcelona Imágenes Y no ha transpirado Sonidos Sobre Ladys Charm Deluxe Tratar Sin cargo

15761 இராசாத்தி: நாவல்.

முகில்வண்ணன் (இயற்பெயர்: வே.சண்முகநாதன்). கல்முனை: கண்மணி பிரசுரம், இலக்கிய பவன், நெசவு நிலைய வீதி, பாண்டிருப்பு-01, 1வது பதிப்பு, டிசம்பர் 2017. (தெகிவளை: ஏ.ஜே.பிரின்ட்ஸ், இல. 44, புகையிரத நிலைய வீதி). viii, 9-129