சதாவதானி (இயற்பெயர்: அருண் செல்லப்பா). கனடா: அருண் செல்லப்பா, மார்க்கம், 1வது பதிப்பு, 2022. (யாழ்ப்பாணம்: மெகா பதிப்பகம், கச்சேரியடி).
353 பக்கம், சித்திரங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21.5×15.5 ISBN: 978-624-99215-0-4.
அச்சுவேலி-மலையகக் கிராமங்களின் வனப்புமிகு காட்சிப் படிமங்களின் பின்னணியில் யாழ்ப்பாணத்தையும் மலையகத்தையும் களங்களாகக் கொண்டு இயற்றப்பட்ட கதை. முகநூலில் 48 அங்கங்களாக வெளிவந்திருந்த தொடரின் நூல்வடிவம். சாதி சமய, வகுப்புவாதக் கட்டமைப்புகளின் பின்னணியில் சிக்கித் தவிக்கும் மூன்று சோடிக் காதலர்களின் வாழ்வை இந்நாவலில் தரிசிக்கலாம். தம்பாலைவாசியான ஏழைப்பெண் பவளம், இந்திய வம்சாவளியான மலையக இளைஞன் மோகன், அவனது தங்கை வள்ளி என்ற வள்ளியம்மை, தோலகட்டி ஜேம்ஸ் செபஸ்டியன், பணக்கார வீட்டுப்பெண் சிட்டுக்குருவி, என கதாபாத்திரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 70களில் எமது மண்ணில் நிலவிய கலை, கலாச்சாரம், பண்பாடு, பாரம்பரியம் என்பன காதலுடன் கலந்து இங்கே காட்சிப்படுத்தப்படுகின்றன.