16772 மன ஊஞ்சல்.

மலரன்னை (இயற்பெயர்: திருமதி அற்புமராணி காசிலிங்கம்). பருத்தித்துறை: ஜீவநதி வெளியீடு, கலையகம், சாமணந்தறை ஆலடிப் பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, மார்கழி 2022. (பருத்தித்துறை: பரணீ அச்சகம், நெல்லியடி).

iv, 184 பக்கம், விலை: ரூபா 800., அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 978-624-5881-57-4.

ஆசிரியரின் 13ஆவது நூலாகவும், ஐந்தாவது நாவலாகவும் இந்நூல் வெளிவந்துள்ளது. குயிலினி என்ற பெண்ணின் வாழ்க்கையை மையமாக வைத்து இந்நாவல் புனையப்பட்டுள்ளது. குடிப்பழக்கத்திற்கு அடிமையாகிய தந்தை. குடும்பச் சுமையைத் தாங்க முடியாமல் தத்தளிக்கும் தாய். வறுமை நிலையை சகிக்க முடியாத தங்கை என பல்வேறுபட்ட இன்னல்களுக்கு மத்தியில் வாழும் குயிலினியின் (வறுமையிலிருந்து மீண்டெழுந்து தன் குடும்பத்தை உய்ய வைக்கும்) மனப்பக்குவம் இன்றைய இளம் பராயத்தினருக்கு ஒரு முன் உதாரணமாக அமைகின்றது. இன்னல்களுக்கு மத்தியில் வாழ்ந்தாலும், அறியாப் பருவத்தில் அவளது உள்ளத்தில் ஆழ வேரூன்றிய காதல், கற்பனைகளை மட்டும் வளர்த்து விட்டதே தவிர காலம் செய்த கோலம் அவளைத் தனிமரமாக்கிவிட்டது. பணமும் பதவியும் பாசத்தைக் குறுக்கறுத்து பண்பில்லா மனித மனத்தை எப்படியெல்லாம் நேர்மாறாக சிந்தித்துச் செயற்பட வைக்கும் என்பது இங்கு சுட்டிக்காட்டப்பட்டிருக்கின்றது. அதன் விளைவுதான் நிறைவேறாத காதலால் எதிர்த்திசையில் பயணித்தாலும் கதாநாயகனால் தனது காதலியின் நெஞ்சத்து ஊஞ்சலில் நிம்மதியாகப் பள்ளிகொள்ள முடிகின்றது. இந்நூல் 237ஆவது ஜீவநதி வெளியீடாக வெளியிடப்பட்டுள்ளது.

ஏனைய பதிவுகள்

Online casino Usa Real money

Articles Greatest A real income Online slots games Sites Type of A real income Video game To try out In the Gambling establishment On the