தமிழ் எழுத்தாளர் இணைய அகம். பருத்தித்துறை: ஜீவநதி வெளியீடு, கலையகம், சாமணந்தறை ஆலடிப் பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, மார்கழி 2020. (பருத்தித்துறை: பரணீ அச்சகம், நெல்லியடி).
xii, 280 பக்கம், விலை: ரூபா 450., அளவு: 21×14 சமீ., ISBN: 978-955-0958-65-8.
2014ஆம் அண்டு தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழும் ஜேர்மனி, சுவிட்சர்லாந்து, அவுஸ்திரேலியா, இங்கிலாந்து, இந்தியா, டென்மார்க், கனடா, இலங்கை, நோர்வே, பிரான்ஸ் ஆகிய நாடுகளில் இருந்து 26 எழுத்தாளர்கள் ஒன்றிணைந்து எழுதிய தொடர் கதை இது. பண்ணாகம் இணையத்தளம் (ஜேர்மனி), அக்கினிக் குஞ்சு இணையத்தளம் (அவுஸ்திரேலியா), யாழ். இணையம், அலைகள் இணையத்தளம் (டென்மார்க்),கோட்டைக்கல்லாறு இணையத்தளம் (இலங்கை) வண்ணை இணையத்தளம் (பிரான்ஸ்) ஆகிய இணையத் தளங்கிலும் தமிழ் எழுத்தாளர் இணைய அகம் என்ற முகநூலிலும் வாரம் ஒரு முறை ஒரு தொடர் என்ற ரீதியில் இத்தொடர்கதை வளர்த்துச் செல்லப்பட்டிருந்தது. அத்தொடர்கதையின் முழுத் தொகுப்பும் தனிநூலாக இங்கு வெளியிடப்பட்டுள்ளது. இத்தொடரை கல்லாறு சதீஸ் (சுவிஸ்) தொடக்கிவைக்க, சுவிஸ்ஸிலிருந்து விக்கி நவரட்ணம், பன்னிருகரம் ஜெயக்கொடி (பொலிகை ஜெயா) ஆகியோரும், ஜேர்மனியிலிருந்து – ஏலையா முருகதாஸ், இ.க.கிருஷ்ணமூர்த்தி, நயினை விஜயன், காசி வி.நாகலிங்கம், மாலினி மாலா ஆகியோரும், பிரித்தானியாவிலிருந்து நிவேதா உதயராயன், பசுபதி சசிகரன் (பசுந்தரா சசி), எம்.என்.எம்.அனஸ் (இளைய அப்துல்லாஹ்) ஆகியோரும், பிரான்ஸிலிருந்து நா.தெய்வேந்திரம் (வண்ணைதெய்வம்), மகேந்திரன் குலராஜா ஆகியோரும், நோர்வேயிலிருந்து திருச்செல்வன் திலீபன் (நோர்வே நக்கீரன்), அவுஸ்திரேலியாவிலிருந்து கே.எஸ்.சுதாகர், லெ.முருகபூபதி, மகாதேவ ஐயர் (ஜெயராமசர்மா), அருண் விஜயராணி ஆகியோரும், கனடாவிலிருந்து குரு அரவிந்தன், ஸ்ரீரஞ்ஜனி விஜயேந்திரா, டென்மார்க்கிலிருந்து கே.எஸ்.துரை, கனகசபாபதி சக்திதாசன், மதுவதனன் மௌனசாமி, சுபாஜினி ஸ்ரீரஞ்சன் ஆகியோரும், தமிழகத்திலிருந்து தேனம்மை லக்ஷ்மணன், தாயகத்திலிருந்து சகாதேவன் நித்தியானந்தன் ஆகியோரும் ஒவ்வொரு அத்தியாயங்களாகத் தொடர்ந்து தொடரை நிறைவுசெய்துள்ளனர். 177 ஆவது ஜீவநதி வெளியீடாக இந்நூல் வெளிவந்துள்ளது.