16783 வெயில் நீர்: குறுநாவல்கள்.

பொ.கருணாகரமூர்த்தி. நாகர்கோவில் 629001: காலச்சுவடு பதிப்பகம், 669, கே.பி.சாலை, 1வது பதிப்பு, நவம்பர் 2021. (சென்னை 600018: கிளிக்டோ பிரின்ட், ஜலீல் டவர், 42, K.B.தாசன் வீதி, தேனாம்பேட்டை).

190 பக்கம், விலை: இந்திய ரூபா 240., அளவு: 21.5×14 சமீ., ISBN: 978-93-91093-27-3.

இத்தொகுப்பு மூன்று குறுநாவல்களையும் குறுநாவல் (வகைமையின்) சாயல்கொண்ட மூன்று நெடுங்கதைகளையும் உள்ளடக்கியது. சூரியனிலிருந்து வந்தவர்கள், பச்சைத் தேவதையின் கொலுசுகள், வித்தகன், வெயில் நீர், பிறகு மழை பெய்தது, கொட்டுத்தனை ஆகிய தலைப்புகளில் இவை எழுதப்பட்டுள்ளன. இத் தொகுப்பில் உருப்பெறும் மையக் கதாபாத்திரங்கள் பொ. கருணாகரமூர்த்தியின் மென்மையும் அங்கதமுமான எழுத்தில் தனித்தன்மை கொண்டோராகின்றனர். அவர்கள் தோற்றத்திலும் குணநலன்களிலும் மாறுபட்டவர்கள். அரசியல் – சமூக ஒழுங்குகளிலிருந்து தனிமைப்பட்டும் முரண்பட்டும் விலகியவர்கள். காசி, ஜெனிபர், நீலக்கண்களைக் கொண்ட பாலசிங்கம் என்று கதைகளில் திரண்டு நிற்கும் கதாபாத்திரங்களை உயிரோட்டமாக்குவது இந்தத் தனித்தன்மையான குணநலன்களும் மாறுபாடுகளும்தான். வெகுஜனப் போக்குகளுக்கும் மதிப்பீடுகளுக்கும் ஒழுங்குகளுக்கும் அதிர்ச்சியை அளிக்கின்றவர்களாக எழுத்தில் அக்கதாபாத்திரங்கள் உருப்பெறுகின்றனர். வெவ்வேறு நிலப்பகுதிகளைக் கண்டடைந்து புனைவுமொழியில் அமரத்துவமான சாத்தியங்களை உருவாக்கிக் காண்பிக்கிறார் பொ. கருணாகரமூர்த்தி. தனித்துவமான மனிதர்களின் வாழ்வில் அரசியல் பண்பாட்டு விழுமியங்கள் நிகழ்த்தும் அழுத்தங்களும் அதிலிருந்து துண்டுபட்டு விடுபடும் தருணங்களும் எனச் சிலநேர ஆசுவாசங்களைக் கையளிக்கிறது பொ.க.வின் கதை உலகம். இக்கதைகள் கொடுப்புக்குள் சிரிப்பை வரவழைத்தாலும் அவை தரும் அதிர்வுகள் எளிதில் வெளிவரமுடியாத உணர்வைத் தருகின்றன.

ஏனைய பதிவுகள்

Lowest Put Casinos You

Blogs Deposit 5 Play with 80 Free Revolves: bugs party casino uk Finest Zero Minimal Deposit Casinos By Country Could it be Safer To experience

Entenda As Regras Do Poker

Content Qual O Superior Site Criancice Poker Online? The Afável Poker Bônus Infantilidade Poker Que Promoções Das Salas Criancice Poker Almanaque De Torneios Freeroll Online