16786 தேத்தண்ணி (தே கஹட்ட).

உபாலி லீலாரட்ண (சிங்கள மூலம்), இரா.சடகோபன் (தமிழாக்கம்). கொழும்பு 10: எஸ்.கொடகே சகோதரர்கள், 661/665/675  பி.டி.எஸ்.குலரத்ன மாவத்தை, மருதானை வீதி, 1வது பதிப்பு, 2021. (வெல்லம்பிட்டிய: சத்துர அச்சகம், 69, குமாரதாச பிளேஸ்).

xx, 21-408 பக்கம், சித்திரங்கள், விலை: ரூபா 1250., அளவு: 23×15 சமீ., ISBN: 978-624-00-1540-0.

“தே கஹட்ட” என்ற பெயரில் உபாலி லீலாரட்ண சிங்களத்தில் எழுதிய நாவலின் தமிழாக்கம் இது. இந்நாவல் 1970களிலான காலப்பகுதியில், மலையகத் தோட்டத் தொழிலாளர்தம் வாழ்க்கைநிலை, அரசியல், தொழில், சமூகம், பொருளாதாரம், பொழுதுபோக்கு எனப் பலதரப்பட்ட விடயங்களையும் கதாபாத்திரங்கள் மூலமாக, சுவையாக விபரித்து, அப்பின்னணியில், கதையை விறுவிறுப்பாகக் கொண்டு செல்வதை அவதானிக்க முடியும். கோபால் என்ற இளம் தொழிற்சங்கப் போராளியின் கதை. மலையகத்தில் பிறந்து வளர்ந்து மலையக மக்களின் உரிமைகளுக்காகக் குரல் கொடுத்து போராட்டங்கள் நடத்தி மாண்டுபோன ஒரு தியாகியின் கதையாக “தேத்தண்ணி” அமைந்துள்ளது. வழக்கமான மலையக தோட்டத் தொழிலாளி ஒருவனின் சமூகப் பிரச்சினைகளுக்கப்பால் அவனது தொழிற்சங்க பிரச்சினைகள் யாவை, அரசியல் உரிமைகள் எவை, அவற்றை எவ்வாறு பெற்றுக்கொள்வது, இவர்களுக்கு மத்தியில் இருக்கும் தொழிற்சங்கங்களும், அரசியல் கட்சிகளும், அவற்றின் தலைவர்களும் இவர்களை எவ்வாறு கசக்கிப் பிழிந்து சுரண்டி, வஞ்சித்து தாம் சுகபோகமாக வாழ்கிறார்கள் என்பதை எல்லாம் அம்பலப்படுத்துவதில் இந்த நாவல் மிக முற்போக்கானதாக தனது ஆணித்தரமான கருத்துகளை முன்வைக்கின்றது.

ஏனைய பதிவுகள்