16791 ஈழத்துத் தமிழியல் மரபும் மாற்றமும் (இருபதாம் நூற்றாண்டுக்கு முற்பட்டது): ஆய்வுக் கட்டுரைத் தொகுப்பு.

ம.இரகுநாதன், ஈ.குமரன் (பதிப்பாசிரியர்கள்). யாழ்ப்பாணம்: தமிழ்த்துறை, கலைப்பீடம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், திருநெல்வேலி, 1வது பதிப்பு, 2022. (யாழ்ப்பாணம்: மதி கலர்ஸ் பிரின்டேர்ஸ், இல. 10, முருகேசர் ஒழுங்கை, நல்லூர்).

xvi, 398 பக்கம், 9 தகடுகள், ஒளிப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 25.5×18.5 சமீ., ISBN: 978-624-97806-7-5.

இலக்கியம், இலக்கணம், சமயமும் தத்துவமும், கலை, அறிவியல் ஆகிய பிரிவுகளின் கீழ் 38 ஆய்வுக் கட்டுரைகள் இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ளன. இலக்கியப் பிரிவின் கீழ் ஈழத்துப் பக்தி இலக்கிய மரபில் கல்வளை அந்தாதி: ஒரு நுனித்த பார்வை (துஹாயா பேரானந்தம்), ஈழத்துத் தமிழ் இலக்கிய மரபில் இணுவில் சின்னத்தம்பிப் புலவரின் தலப்பாடல்கள் (தயாளினி குமாரசாமி), இரகுவம்சத்தின் ஆற்றுப்படலம் ஓர் ஆய்வு நோக்கு (ஈஸ்வரநாதபிள்ளை குமரன்), 19ஆம் நூற்றாண்டு ஈழத்துத் தமிழ் இலக்கியங்களில் விநாயகர் சட்டி புராணம் (ச.பத்மநாதன்), ஈழத்துப் பூதன்தேவன் பாடல்கள்: அரிய தரவுகளும் ஆய்வுநிலைப்பட்ட சொற்பதிவுகளும் (சு.சுயா), ஈழத்துத் தமிழ் இலக்கிய வரலாற்றில் சீமந்தனி புராணம்: ஓர் அறிமுகம் (கோபாலப்பிள்ளை குகன்), ஆணல்ட் சதாசிவம்பிள்ளையின் நன்னெறிக் கதா சங்கிரகம்: ஓர் ஆய்வு நோக்கு (தருமராசா அஜந்தகுமார்), இளங்கோவின் கண்ணகியும் ஈழத்துக் கண்ணகையும் (ம.இரகுநாதன்), காளிதாசரின் இரகுவம்சமும் அரசகேசரியின் இரகுவம்மிசமும்: ஓர் ஒப்பியல் நோக்கு (சிறிகலா ஜெகநாதன்), அறியப்படாத ஆய்வாளர் சி.த.சரவணமுத்துப்பிள்ளை (செ.யோகராசா), ஆர்ணல்ட் சதாசிவம்பிள்ளையின் தமிழியற் பணிகள் பற்றிய நோக்கு (செல்லையா திருநாவுக்கரசு, முருகையா சதீஷ்), ஈழத்து இலக்கிய மரபில் தமிழ்நாட்டு இலக்கியங்களின் செல்வாக்கு (இரா.கனகேஸ்வரி), ஈழத்துத் தமிழ் இலக்கிய மொழிபெயர்ப்பு (மனோன்மணி சண்முகதாஸ்), வெருகல் ஸ்ரீ சித்திரவேலாயுதர் காதல் பிரபந்தத்தில் புலப்பாட்டு மரபு (செல்வ அம்பிகை நந்தகுமாரன்) ஆகிய 14 கட்டுரைகளும், இலக்கணப் பிரிவின் கீழ் ஈழத்தவரின் இலக்கணக் கல்வி முயற்சிகள் (இரா.புவனேஸ்வரி), கூழங்கைத் தம்பிரானின் நன்னூல் காண்டிகையுரை (சிவகுமார் செரஞ்சன்) ஆகிய 2 கட்டுரைகளும், சமயமும் தத்துவமும் என்ற பிரிவில் ஆறுமுக நாவலரின் பாலபாடங்கள் காட்டும் விழுமிய சிந்தனைகள் (வ.குணபாலசிங்கம்), ஈழத்துத் திருத்தலங்கள் மீதான தேவாரப் பதிகங்கள் காட்டும் இயற்கையும் சுற்றுச் சூழலும் (மு.கிருஷா), ஈழத்து நாட்டார் வழக்குகள்: மட்டக்களப்புப் பிரதேச ஆகமம் சாரா வழிபாட்டுச் சடங்குகளையும் நம்பிக்கைகளையும் அடிப்படையாகக் கொண்ட ஆய்வு (கிருபைரெத்தினம் சர்வேஸ்வரன்), யோகக் கலை மரபில் பிரசாத ஷட்சுலோகி: சிவசங்கர பண்டிதரின் தமிழுரையை அடிப்படையாகக் கொண்டது (மு.சுவாமிநாத சர்மா), கந்தபுராண இயற்பியல் காட்சிகளை விளக்கும் 19ஆம் நுற்றாண்டு ஈழத்தமிழ் அறிஞர்களது உரைகள் (சி.யமுனானந்தா), சுவாமி ஞானப்பிரகாசரின் சிவஞானசித்தியார் சுவபக்க உரை (பொன்னுத்துரை சந்திரசேகரம்), இந்துப் பண்பாட்டின் விருத்தி நோக்கிலே இலங்கையில் தமிழ்ச் சமணம் (கௌ.சித்தாந்தன்), ஈழத்தில் ஒல்லாந்த கால இலக்கியங்களினூடாகப் புலனாகும் சமய மற்றும் சமூகச் சடங்குகள்-ஓர் ஆய்வு (ரமணியா ஜெயக்குமார்), அஸன்பே சரித்திரத்தில் புலப்படும் இஸ்லாமியப் பண்பாட்டின் பிரதிபலிப்பு (முருகையா சதீஷ்), தமிழர் தர்க்கவியற் செல்நெறியில் நியாய இலக்கணத்தின் வகிபாகம் (தி.செல்வமனோகரன்) ஆகிய 10 கட்டுரைகளும், கலை என்ற பிரிவில் ஈழத்துத் தமிழ் நாட்டுக் கூத்து வளர்ச்சியில் கிறிஸ்தவ சமயத்தின் வகிபாகம் (யே.ஹேரோசினி), ஈழத்தின் உள்ளூர்க் கூத்தரங்குகளும் அதில் ஞாபகங்கள் பெறும் முக்கியத்துவமும்-ஓர் ஆய்வு (து.கௌரீஸ்வரன்), ஈழத்துத் தமிழிசை வளர்ச்சி ஒரு வரலாற்று நோக்கு (ஸ்ரீநாகபூஷணி அரங்கராஜ்), ஈழத்தமிழர் இசை வரலாற்றில் இசைக்கருவிகள் தொன்மையும் தொடர்ச்சியும் (ஐஸ்வரியா கணேசன்), ஈழத்துத் தமிழிசைப் பாடல்களின் வளர்ச்சி நிலை (த.றொபெட் அருட்சேகரன்), ஈழத்தமிழர் தாளக்காவடி ஆடல் (திருமதி.அ.கிருபைராஜா) ஆகிய 6 கட்டுரைகளும், அறிவியல் என்ற பிரிவில், யாழ்ப்பாணத் தமிழர் பண்பாட்டில் மரபுவழிச் சீர்மியம் (கி.விசாகரூபன்), ஆற்றுப்படுத்தல் நோக்கில் வியாகுலப் பிரசங்கம் (நீ.மரிய நிறோமினி), சைவப் பண்பாட்டில் சோதிடமும் வைத்தியமும்: ஆரியச் சக்கரவர்த்திகள் காலத்தில் எழுந்த சோதிட, வைத்திய நூல்களை அடிப்படையாகக் கொண்ட நோக்கு (விக்னேஸ்வரி பவநேசன்), ஈழத்து இந்துப் பண்பாட்டுக்குரிய சித்த மருத்துவப் பாரம்பரியத்தில் அமிர்தசாகரம் பெறும் முக்கியத்துவம் (திருச்செல்வம் கிஷாந்தின்), சித்தர் கூறும் சித்த மருத்துவம் ஈழத்தில் எழுந்த சித்த மருத்துவ நூல்ககளை அடிப்படையாகக் கொண்ட ஆய்வு (மதுராஜினி சந்திரகுமார்), யாழ்ப்பாணத்தில் மருத்துவர் சாமுவேல் கிரீன் அவர்களின் தமிழ் மருத்துவப் பணி (கணேஸ் ஸ்ரீதரன், அன்புச்செல்வி ஸ்ரீதரன், சபாரட்ணம் கணேசன்), ஆறுமுக நாவலரின் அறிவியல் சிந்தனை (செல்வரஞ்சிதம் சிவசுப்பிரமணியம்) ஆகிய 7 கட்டுரைகளும் இடம்பெற்றுள்ளன.

ஏனைய பதிவுகள்

Самые надежные онлайн казино 2025 играйте с уверенностью и безопасностью

Содержимое Критерии выбора безопасных платформ Как определить надежность онлайн-казино Топ лицензированных операторов 2025 года Лучшие казино с лицензией Почему выбирают топ казино? Платформы с официальными