16792 உயிரினங்களின் உடலினுள் ஆவி ஆன்மா என ஒன்றில்லை.

க.சிவனடியான். வட்டுக்கோட்டை: டாக்டர் க.சிவனடியான், சங்கரத்தை, 1வது பதிப்பு, 2021. (அச்சக விபரம் தரப்படவில்லை).

116 பக்கம், விலை: ரூபா 250., அளவு: 21.5×15.5 சமீ.

நூலாசிரியர் சிவனடியான் முன்னர் 1993இல் என் கையெல்லாம் இரத்தம் என்ற கதைத் தொகுதியையும், 2013இல் நெருப்பாற்றில் ஒரு நீலோற்பலம் என்ற கதைத் தொகுதியையும் எழுதி வெளியிட்டவர். இந்நூல் கடந்த இரண்டாண்டுகளுக்கு மேலாக ஆசிரியர் எழுதிய  26 கட்டுரைகளின் தொகுப்பாக மலர்ந்துள்ளது. உயிரினங்களின் உடலில் ஆவி ஆன்மா என ஒன்றில்லை, மொழிப்பற்று வேண்டாம், தாவர உணவே மோசமான உயிர்க் கொலை, பசு பக்திக்குரியதா பரிதாபத்துக்குரியதா?, மதப்பற்று வேண்டாம், கற்புணர்வின் காரணம் ஒழுக்க உணர்வு மட்டுமல்ல, தம்பதிகள் தாம்பத்தியத்தைத் தவிர்க்கக் கூடாது, தவமாய்த் தவமிருந்து, இருக்குமிடத்தில் இருந்தால்தான், புதுப்புது வெளியீடுகள், ஓரினச் சேர்க்கை ஒரு உடலியற் குறைபாட்டு நோய், உலகில் போர் என்றும் வேண்டாம், குற்றங்களை மறைக்கவா கோயில்கள்?, பிறக்கப்போகும் குழந்தையின் பாலினத்தைத் தீர்மானிப்பது ஆண் மட்டுமே பெண்ணிற்குப் பங்கில்லை, பிரபஞ்சத்திலிருந்து பூமியைப் பாருங்கள், கடவுள் இல்லாத கோவில் வேண்டும், சமயங்களும் சமூக விரோதங்களும், புதுப்புது வடிவில் பலப்பல கடவுள்கள், மனிதன் உருவான வரலாறு, காதலின் பாதையும் அதன் பல்வேறு பரிமாணங்களும் விளைவுகளும், தவறான கருத்துக்களும் முடிவுகளும், இன்றைய உலகில் அரசியல்வாதிகள், தற்காலக் குடும்பங்கள், மனிதனுக்கு முன் கடவுள்கள் சமமில்லை, பெண்மையின் மயானங்கள், காதலும் கடந்துபோகும் சாதல் ஒன்றே காத்திருக்கும் ஆகிய தலைப்புகளில் இவை எழுதப்பட்டுள்ளன.

ஏனைய பதிவுகள்

Titanique The brand new Sounds

Posts Self-help guide to Enjoy Titanic Slots On the internet | browse around this website Focus on Date Quantity of Courses Offered In the Vessels