16793 எழுத்தின் இயங்கியல்.

ந.மயூரரூபன். வல்வெட்டித்துறை: மீளுகை-2, பழைய பொலிஸ் நிலைய வீதி, வல்வெட்டி, 1வது பதிப்பு, மாசி 2022. (யாழ்ப்பாணம்: ஆகாயம் பதிப்பகம், இமையாணன், உடுப்பிட்டி).

(6), 118 பக்கம், விலை: ரூபா 420., அளவு: 21×14 சமீ., ISBN: 978-624-99181-3-9.

இந்நூல் எழுத்தின் இயங்கியலையும் அது தொடர்பான விமர்சனங்களுக்கான பதிலையும் வெளிப்படுத்துவதோடு விமர்சனம் என்னும் ஒற்றைச் சொல்லின் வழி, எழுத்தை-கலைப்பிரதியின் பல் பரிமாணத்தை விளங்கிக்கொள்ளாது புறங்கையால் தட்டிவிட்டுச் செல்வோருக்கு படைப்பாளியின் உழைப்பை அதன் பெறுமானத்தை வெளிப்படுத்துகின்றது என்கிறார் விரிவுரையாளர் தி.செல்வமனோகரன். ஒரு பிரதி கொண்டிருக்கும் இயங்கியலை புரிந்துகொள்வதற்கு வழிகாட்டியாகவும் இந்நூல் அமைகின்றது. இதில் கருத்துருவமும் பிரக்ஞையும், உளவியல் உருவாக்கம், உடல், மொழி, வரலாறு, இலக்கியத்தன்மை, கோட்பாடு, விமர்சனம், ஆரம்பித்தல், அருவுருவாய் ஆகிய தலைப்புகளில் இதிலுள்ள கட்டுரைகள் எழுதப்பட்டுள்ளன. ந.மயூரரூபன் (1978-) தொன்னூறுகளின் பிற்பகுதியிலிருந்து எழுதி வருகிறார். யாழ்ப்பாணம், வடமராட்சி கிழக்கு அம்பனையைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர் வல்வெட்டியில் வசித்து வருகிறார். சிறுகதை, கவிதை, கட்டுரை, நாடகம், விமர்சனம் ஆகிய துறைகளில் இயங்கிவரும் இவர், இதுவரை சமூகப்பிரச்சினைகள்: சில சமூகவியல் குறிப்புகள் (2012), நீயுருட்டும் சொற்கள்-கவிதை (2012), சொற்குறியம்-கட்டுரை (2013), மரத்தில் தொங்கும் பாம்பு-சிறுகதை (2016), புனைவின் நிழல்-சமூகவியல், அமைப்பியல், இலக்கியம் (2018) ஆகிய தொகுப்புகளை வெளியிட்டிருக்கிறார்.

ஏனைய பதிவுகள்