16794 ஒரு புன்னகை போதும்.

வாணமதி. தமிழ்நாடு: ஓவியா பதிப்பகம், 17-13-11, ஸ்ரீராம் கொம்பிளெக்ஸ், காந்தி நகர் பிரதான சாலை, வத்தலகுண்டு 624 202, திண்டுக்கல் மாவட்டம், 1வது பதிப்பு, செப்டெம்பர் 2016. (சென்னை 600 116: ஏ.கே.எல் பிரின்டர்ஸ்).

96 பக்கம், விலை: இந்திய ரூபா 100., அளவு: 21×14 சமீ.

ஐரோப்பிய நாடுகளின் வாழ்வியலில் உள்ள நல்ல தன்மைகளை எடுத்துக் கூறி பகுத்தறிவுசார் நம்பிக்கையில் வாழப்பழகுவோம் என்று நம்மை அழைக்கும் வாணமதி இலங்கையில் திருகோணமலையைப் பிறப்பிடமாகக் கொண்டவர். பின்னாளில் தமிழகத்தில் வாழ்ந்து கல்வி கற்று, 1999 நவம்பரில் சுவிட்சர்லாந்துக்குப் புலம்பெயர்ந்தவர். 2014 முதல் எழுதத் தொடங்கிய இவரது படைப்பாக்கங்களில் தேர்ந்த 21 கட்டுரைகள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன. கனவுகள் இலவசமா?, முகமூடி முகம், புரிந்தும் புரியாமலும், காலத்தின் மதிப்பு, நம்பிக்கையின் அடிப்படை, உறவு என்னும் அமைப்பு, தனிமைச் சிறை, மொழி என்னும் அடையாளம், பெண் எனும் நாணல், நரையும் திரையும், பைத்தியக் காரர்களின் சிந்தனை, இயற்கையின் செயல், ஒரு சிறு புன்னகை, ஒரு கூரையின் கீழ், ஒரு வடிவம் சமைத்து, எது நமது கலாச்சாரம்?, பாலியல் யார் பிழை?, கைகோர்த்திட வா தோழி, நன் என்ற நம்பிக்கை, ஒரு புன்னகை போதும், இரட்டைக் கலாச்சாரம் ஆகிய தலைப்புகளில் இக்கட்டுரைகள் எழுதப்பட்டுள்ளன.

ஏனைய பதிவுகள்

16696 பொய்யெல்லாம் மெய்யென்று.

மதுபாரதி (இயற்பெயர்: திருமதி ப.இளங்கோ). திருக்கோணமலை: கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம், 1வது பதிப்பு, டிசம்பர் 2021. (திருக்கோணமலை: ஏ.ஆர்.டிரேடர்ஸ், 82, திருஞானசம்பந்தர் வீதி). 135 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20×14.5 சமீ.,