16796 கலாச்சாரக் கவனிப்புகள்.

சச்சிதானந்தன் சுகிர்தராஜா. நாகர்கோயில் 629001: காலச்சுவடு பதிப்பகம், 669, கே.பி.சாலை, 1வது பதிப்பு, செப்டெம்பர்; 2021. (சென்னை 600018: கிளிக்டோ பிரின்ட், Clicto Print, Jaleel Towers, 42, K.B.Dasan Road, Teynampet).

256 பக்கம், விலை: இந்திய ரூபா 300., அளவு: 21.5×14 சமீ., ISBN: 978-93-91093-13-6.

இலங்கையில் பிறந்து வளர்ந்த இந்நூலாசிரியர் கடந்த 30 ஆண்டுகளாக இங்கிலாந்தின் கல்விசார் சூழலில் வாழ்கின்றார். பேர்மிங்ஹாம் பல்கலைக்கழகத்தில்  விளக்கவியல் பேராசிரியராகப் பணியாற்றிய இவர் பின்காலனித்துவம் பற்றிய அறிவுலக ஆராய்ச்சியினால் அறியப்படுகின்றார். அசாதாரண மனிதன் (2008) என்ற சிறுகதைத் தொகுதி, பண்பாட்டுப் பொற்கனிகள் (2010), நூல்கள் நூலகங்கள் நூலகர்கள் (2021) ஆகிய கட்டுரைத் தொகுதிகள்  என மூன்று நூல்கள் காலச்சுவடு பிரசுரமாக முன்னர் வெளிவந்துள்ளன. இது இவரது நான்காவது நூலாகும். இந்நூலில் இங்கிலாந்தும் நானும், இங்கிலாந்தில் மிஸ்டர் இட்லி, நீங்கள் புலியா?, மண்டேலாவும் மைக்ரோவேவும், ஆங்கில ஆஸ்பத்திரி அனுபவங்கள், தினசரிப் பத்திரிகையும் தினசரிப் பழக்கமும், சோதனைக் காலம், ஆங்கில வளாகங்கள்: சில நடப்புகள், மேற்கத்தியப் பல்கலைக்கழகமும் இனவாதமும், சுதந்திரச் சந்தையில் சுவரொட்டிப் பாவை, படிவார்ப்புகள் சிதைந்த கதை, தேவன் உங்களோடு-தத்வமஸி, சாலொமோன் ராஜா நுகர்ந்த இந்திய சந்தனத் தைலம், அக்பருக்காகத் தலைப்பாகை கட்டிய இயேசுநாதர், தேவனின் மகிமை கீழ்த்திசையில், ஐக்கிய இராச்சியத் தேர்தல்: குழப்பமும் சிக்கலும், ஐரோப்பிய வாக்கெடுப்புகள்: சில அவதானிப்புகள், டொனால்ட் டிரம்பும் வின்ட்ரிப்பும், அமெரிக்கத் தேர்தல்: சில அவசரமான அவதானிப்புகள், பயங்கரவாதம்: சுருக்கக் குறிப்புகள், புனிதப் போராளிகள், ஒசாமா பின் லாடன் என்னும் பயனுள்ள பகைவர், எகிப்தியப் புரட்சி: அரபு நாடுகளின் பின்-கருத்தியல் போராட்டம், வகுப்பறைகள் வதைத்தளமாக மாறிய கதை, உதைபந்தாட்ட உலகக் கோப்பை: சில பழைய சம்பவங்கள், சில பதிய சங்கடங்கள், ஒலிம்பிக்ஸின் கதையும் சில துணைக் கதைகளும் சரிசமநிலையற்ற ஐந்து வளைய விளையாட்டுகள், முடிவடைந்த நெடும் பயணம், ஜமைக்காவில் 10 ¾ நாட்கள், பட்டுச் சாலைகள், ஒரு தென்கொரிய நாட்டவருக்கு நான் கொடுத்த சாரம், பறவையைக் கண்டான் விமானம் படைத்தான், தாயிடம் மகன் கேட்க சொல்லத் தவறிய காரியங்கள், பணித்துறைஞரும் கடவுச் சீட்டும், விமானப் பயண உபாதைகள், பண்பாடும் பணித்துறைஞர்களும் ஆகிய 35 கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன.                                                                   

ஏனைய பதிவுகள்

GGBET LegalnyBukmacherOnlineIKasyno

Содержимое GGBet: Legalne Zakłady I Kasyno Online GG Bet: Bukmacher Online Z Licencją W Polsce GG Bet: Kasyno Dla Miłośników Rozrywki Online GG Bet: Bonusy