16797 கலைப்பேச்சு: திரை-நூல்-அரங்கு.

ரூபன் சிவராஜா. சென்னை 600 042: யாவரும் பப்ளிஷர்ஸ், 24, Shop No B, S.G.P. Naidu Complex, தண்டீஸ்வரம் பஸ் தரிப்பு, பாரதியார் பூங்காவுக்கு எதிராக, வேளச்சேரி பிரதான சாலை, 1வது பதிப்பு, மே 2021. (சென்னை 600 042: யாவரும் பதிப்பகம்).

262 பக்கம், ஒளிப்படங்கள், விலை: இந்திய ரூபா 310., அளவு: 21.5×14 சமீ., ISBN: 978-81-953434-5-4.

”இக்கட்டுரைகள் நான் வாசித்த நூல்களிலிருந்து சில, பார்த்த அரங்க வெளிப்பாடுகளிலிருந்து சில, திரைப்படங்களிலிருந்து சில பற்றிய அறிமுக-விமர்சனப் பார்வைகள். பெரும்பாலானவை 2014-2020 வரையான காலப்பகுதியில் எழுதப்பட்டவை. சில கட்டுரைகள் 2010-2012 காலப்பகுதியில் எழுதப்பட்டவை. காக்கைச் சிறகினிலே, தினக்குரல், பொங்கு தமிழ் இணையம், தமிழர் தளம், தாய்வீடு, புதிய பரிமாணம் இணையம், நடு இணைய சஞ்சிகை ஆகியவற்றில் வெளிவந்தவை. அத்தோடு முகநூலில் எழுதிய சில குறிப்புகளும் உள்ளடக்கப்பட்டுள்ளன” (நூலாசிரியர் முன்னுரையில்).

ஏனைய பதிவுகள்