உமாஜி (இயற்பெயர்: உமாசுதன் கிருபாகரன்). கொழும்பு: Yuva Production (Pvt) Ltd, 69/18, Templer’s Road, Mount Lavinia, 1வது பதிப்பு, 2018. (அச்சக விபரம் தரப்படவில்லை).
283 பக்கம், விலை: ரூபா 500., அளவு: 21×14 சமீ., ISBN: 978-955-35746-0-2.
உமாஜி எழுதிய ”காக்கா கொத்திய காயம்” ஓர் வாலிபனின் நிலம் மீதான நினைவுகளின் தொடர்ச்சி என்று கொள்ளலாம். ஈழப் போரின் இறுதிப் போர் ஆரம்பித்த பின்னர் யாழ்ப்பாணத்திலும் கொழும்பிலும் நிகழ்ந்த மக்களின் வாழ்வியலை இந்நூல் பேசுகிறது. ஆழமான நுண்ணுணர்வுகளைத் தொடும் புனைவு வீச்சுடனும், படைப்பாற்றலுடனும் வெளிப்படுத்தப்பட்ட பதிவுகளைக் கொண்ட நூல். ஈழத்து மக்களின் யுத்தகால வாழ்க்கையை, அதற்குள் பிறந்து வளர்ந்து அனுபவித்த ஒருவரின் பார்வையில் புரிந்துகொள்ள வாசகரை அழைத்துச் செல்கிறது இந்நூல். நாம் வாழ்ந்த மண், கடந்துவந்த வாழ்க்கை, பார்த்து வளர்ந்த, தொலை தேசங்களில் பிரிந்துவிட்ட உறவுகள், விலகிச் சென்ற, தொலைந்துபோன நண்பர்கள், நேசித்த, மறக்கமுடியாத மனிதர்கள், மறந்துவிட விரும்பும் துயர்தோய்ந்த பொழுதுகள், கொண்டாட்டமான தருணங்கள் எனப்பேசித் தீராத அனுபவங்களைச் சுமந்துகொண்டே அலையும் வாழ்வில் 2011-2014 காலப்பகுதியில் எழுதப்பட்ட சில பதிவுகளே இந்நூலில் உள்ளன. யாழ்ப்பாணம், மாவிட்டபுரத்தில் பிறந்த நூலாசிரியர் தன் வாழ்க்கையில் கால் நூற்றாண்டை இடப்பெயர்வுகளின் வழி கடந்தவர்.