16799 தமிழியல்-ஆய்வுகள்-பார்வைகள்.

சிவனேஸ் ரஞ்சிதா. பருத்தித்துறை: ஜீவநதி வெளியீடு, கலையகம், சாமணந்தறை ஆலடிப் பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, தை 2023. (பருத்தித்துறை: பரணீ அச்சகம், நெல்லியடி).

90 பக்கம், விலை: ரூபா 450., அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 978-624-5881-75-8.

இந்நூல் பல்வேறு தமிழ் இலக்கிய மாநாடுகளில் ஆசிரியரால் சமர்ப்பிக்கப்பட்ட ஆய்வுக் கட்டுரைகளின் தொகுப்பாகும். கிளை மொழியியல் நோக்கில் முத்துமீரானின் சிறுகதைகள், தமிழ் பேச்சுவழக்குச் சொற்களில் சிங்களமொழிச் சொற்களின் தாக்கம், செங்கை ஆழியானின் படைப்புகளில் இயற்கை: வாடைக்காற்று நாவலை அடிப்படையாகக் கொண்ட ஆய்வு, சங்க இலக்கியங்களினூடாக வெளிப்படும் சூழலியல் கல்வி: குறுந்தொகையை மையப்படுத்திய ஓர் ஆய்வு, பால்நிலை வேறுபாடும் இலக்கியமும்: சுமைகள் சிறுகதைத் தொகுப்பு, இஸ்லாமிய சமூகப் பண்பாட்டு ஆவணமாக இலக்கியம்: பாலமுனை பாறூக்கின் ”தோட்டுப்பாய் மூத்தம்மா” குறுங்காவியத்தை அடிப்படையாகக் கொண்ட ஆய்வு மீதான ஒரு நோக்கு, ஈழத்துத் தமிழ்ச் சிறுகதைகளில் வெளிப்படும் கல்விசார் பிரச்சினைகள்: கொங்காணிச் சிறுகதைத் தொகுப்பு மீதான பார்வை, இலங்கைவாழ் மலையகத் தமிழ்ச் சமூகப் பண்பாட்டு ஆவணமாக இலக்கியம்: கட்டுப்பொல் நாவலை மையப்படுத்திய ஒரு தேடல், பகுப்புமுறைத் திறனாய்வு அடிப்படையில் குரு அரவிந்தனின் சிறுகதைகள்: ஒரு விமர்சன நோக்கு, பழந்தமிழ் இலக்கியங்கள் சுட்டும் பெண்களும் மறுதலிக்கப்படும் பால் சமத்துவமும்: ஒளவையின் நல்வழியை முன்னிறுத்திய ஒரு பார்வை, மாத்தளை சோமுவின் நாவல்களில் சமுதாயப் பிரச்சினைகள்: மூலஸ்தானம், அவள் வாழத்தான் போகிறாள்- ஒரு விமர்சனப் பார்வை, ஈழத்துத் தமிழ் இலக்கிய சூழலின் ஓர் ஆளுமையாக மிளிரும் கே.ஆர். டேவிட்டின்  பாலைவனப் பயணிகள் ஒரு பார்வை ஆகிய பன்னிரண்டு ஆய்வுக் கட்டுரைகள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. இந்நூல் 255ஆவது ஜீவநதி வெளியீடாக வெளியிடப்பட்டுள்ளது. சிவனேஸ் ரஞ்சிதா, கெக்கிறாவையில் ஜெயந்தி நகரைப் பிறப்பிடமாகக் கொண்டவர். யாழ்.பல்கலைக் கழகத்தின் தமிழ் சிறப்புக் கலைப் பட்டதாரி. களனிப் பல்கலைக்கழகத்தில் மொழியியல்துறையில் உதவி விரிவுரையாளராகப் பணியாற்றுகின்றார். 

ஏனைய பதிவுகள்

Cellular Ports

Articles Simple tips to Enjoy Online Slots cuatro Simple steps What things to Pay attention to When selecting Online slots Online slots games A real