16800 தற்காலிக முகவரியும் நிரந்தர முகவரியும்.

த.அபிநாத். பருத்தித்துறை: ஜீவநதி வெளியீடு, கலையகம், சாமணந்தறை ஆலடிப் பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, மாசி 2022. (பருத்தித்துறை: பரணீ அச்சகம், நெல்லியடி).

vi, 78 பக்கம், விலை: ரூபா 350., அளவு: 21.5×14 சமீ., ISBN: 978-624-5881-40-6.

யாழ். இந்துக் கல்லூரி மாணவன் த.அபிநாத் அவர்களின் கன்னிக் கவிதைத் தொகுப்பு இது. தனது 11ஆவது வயதிலேயே யாழ்ப்பாணத்தில் வெளிவரும் வலம்புரி பத்திரிகைக்கு தனது கவிதையை அனுப்பி அச்சுருவில் கண்டு மகிழ்ந்தவர் இவர். இந்நூலில் அபிநாத் எழுதிய ஆன்மீகக் கட்டுரைகளும், ஈழத்துப் படைப்பாளிகளின் படைப்புகள் பற்றிய நுனிப்புல் மேய்தலாக அமையும் விமர்சனக் கட்டுரைகள், இலக்கியக் கட்டுரைகள் எனப் பலதரப்பட்ட பத்தொன்பது ஆக்கங்கள் இடம்பெற்றுள்ளன. நல்லைக் குமரன் மலர், தீம்புனல், தென்னாடு ஆகிய இதழ்களில் இவை முன்னர் பிரசுரமாகியுள்ளன. விக்ரமாதித்தன்- வேதாளம் கதைகளும் மறுவாசிப்பும், காமிக்ஸ் கதைகளின் உலகம், மென்திறன்களைக் கட்டியெழுப்பும் அழகியற் பாடங்கள், குறுந்தொகை காட்டும் சங்ககாலப் பழக்கவழக்கங்கள், ஹைக்கூவின் கிளை வடிவங்கள், சோ.ப. சிறப்பிதழ் சில குறிப்புகள், இலக்கியச் செயற்பாட்டாளர் க.பரணீதரன், தொன்மப் போரியல் நுட்பங்களைப் பேசும் அற்புதமான பொக்கிசம், சித்தாந்தன் கவிதைகளில் நகரம், சி.ரமேஷ் கவிதைகளில் மதத் தொன்மம், தற்காலிக முகவரியும் நிரந்தர முகவரியும், த.ஜெயசீலன் கவிதைகளில் உவமை நயம், திரைப்படப் பாடல்களில் வித்தியாசமான முயற்சிகள், நா.முத்துக்குமாரின் தத்துவ வரிகள், திருப்பாவைப் பாடல்களில் அங்கதச் சுவையூடாய் அறிவுரை கூறும் பாங்கு, ஆர்கொலோ சதுரர், பாகம் பெண்ணுரு ஆனாய் போற்றி, அறிவியல் தத்துவ நோக்கில் அம்பலத்தாடுவான், விருந்தோம்பல் எனும் ஒப்பற்ற சைவத் தமிழ்ப் பண்பாடு, சிலப்பதிகாரத்தில் சிகிவாகனன் ஆகிய தலைப்புகளில் இக்கட்டுரைகள் எழுதப்பட்டுள்ளன. இந்நூல் 220ஆவது ஜீவநதி வெளியீடாக வெளிவந்துள்ளது.

ஏனைய பதிவுகள்

Über Ai Zur Perfekten Homepage

Content Unser dutzend des teufels Besten Programme Zum Hauptseite Erstellen 2024 Wix: Nicht früher als 11,90 Monatlich Im folgenden Gehe Meine wenigkeit Unter Drei Arten Das