அ.முத்துலிங்கம். சென்னை 600077: நற்றிணை பதிப்பகம், பிளாட் எண் 45, சாய் கவின்ஸ் குமரன் அபார்ட்மென்ட்ஸ், ஸ்ரீதேவி கருமாரியம்மன் நகர், கிருஷ்ணா நகர் பிரதான சாலை, நூம்பல், ஐயப்பன் தாங்கல், 2வது பதிப்பு, செப்டெம்பர் 2019, 1வது பதிப்பு, செப்டெம்பர் 2016. (சென்னை 600005: சாய் தென்றல் பிரிண்டர்ஸ்).
120 பக்கம், விலை: இந்திய ரூபா 150., அளவு: 23×15 சமீ.
அ.முத்துலிங்கம் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு இது. வாசகர் தேவை, நல்ல சிறுகதை, தமிழுக்கு ஓர் அரியணை, பூக்கள் பறப்பதில்லை, நாயும் தாயும், பழைய சப்பாத்து, எழுத்தாளரும் வாசகரும், ஹார்வார்ட் பல்கலைக்கழகத்தில் தமிழ் பீடம், இளம் விதவை பெற்றோனியஸ், ராஜவீதி, குரங்குகள் ராச்சியம், ஐந்தாவது கால், வார்த்தைச் சித்தர், திரும்பிப் பார்க்கவில்லை, கிறிஸ்மஸ் தவளை, தோற்றவர் வரலாறு, ஜேசியும் வேசியும் ஆகிய கட்டுரைகளும், சிவாஜியின் குரல், பார்த்ததைச் செய்யும் திறன், வெள்ளைக்காரன், அடுத்த தலைமுறை தமிழ் இலக்கியம் படைக்குமா? ஆகிய நேர்காணல்களும் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 68838).