சச்சிதானந்தன் சுகிர்தராஜா. நாகர்கோயில் 629001: காலச்சுவடு பதிப்பகம், 669, கே.பி.சாலை, 1வது பதிப்பு, செப்டெம்பர்; 2021. (சென்னை 600018: கிளிக்டோ பிரின்ட், Clicto Print, Jaleel Towers, 42, K.B.Dasan Road, Teynampet).
175 பக்கம், விலை: இந்திய ரூபா 200., அளவு: 21.5×14 சமீ., ISBN: 978-93-91093-19-8.
பிரித்தானியாவில் பேர்மிங்ஹாம் பல்கலைக்கழகத்தில் விளக்கவியல் பேராசிரியராகப் பணியாற்றிய சச்சிதானந்தன் சுகிர்தராஜா பின்காலனித்துவம் பற்றிய அறிவுலக ஆராய்ச்சியினால் அறியப்படுகின்றார். அவரது 23 கட்டுரைகளை உள்ளடக்கியதாக இந்நூல் வெளிவந்துள்ளது. அசோகமித்திரன் தந்த கதைப் புத்தகங்களின் கதை, எழுத்திலும் நேரிலும், நூல்கள்-நூலகங்கள்-நூலகர்கள், ஆறுதல் அணங்குகள், ஆறுதல் அணங்குகள்: அதிகாரம் 2, ஆங்கில அகராதியும் ஒரு வார்த்தைப் பித்தரும், மறைக்கப்பட்ட மறுக்கப்பட்ட பெண் பங்களிப்புகள், சுவடிக் கூடத்தில் சுற்றிய போதில், ஒரு கதாசிரியர் பற்றிய சின்ன நினைவுகள், கடுதாசி நூல்களும் கையொப்பங்களும், ஏதாதிபத்தியங்களின் எழுத்துக்கள்: உலர்ந்த உரைநடை, அபாயகரமான அரசியல், காலஷ்னிக்கோவ் ஏந்திய கரங்கள் எழுதிய கவிதைகள்: தலிபானின் ஆழ்கருத்துச் செய்யுள்கள், இலக்கியங்களும் வசீகர வரிகளும், எச்சரிக்கை: நீங்கள் இங்கே வாசிக்கப்போவது திருடப்பட்டிருக்கலாம், அன்னா பெர்ன்ஸின் பால்காரன், கறுப்பர்களின் காபந்துக்காரர் (அஞ்சலி: டோனி மோரிசன்), பரிசுத்தவான்கள் பாளையம், 2012இல் வெளிவந்த ஆங்கில நாவல்கள்: ஒரு தற்சார்புடைய தேர்ந்தெடுப்பு, 2013: சில ஆங்கிலப் புத்தகங்கள், 2014: சில மேற்கத்திய நூல்கள், ஐந்து நாவல்களும் ஒரு பரிகாசப்பாடலும், சில ஆங்கில அ-புனைவு நூல்கள், இரு பெண்கள் இரு நாவல்கள் ஆகிய தலைப்புகளில் இவை இடம்பெற்றுள்ளன.