ஆசி. கந்தராஜா. நாகர்கோவில் 629001: காலச்சுவடு பதிப்பகம், 669, கே.பி.சாலை, 1வது பதிப்பு, ஜீலை 2022. (சென்னை 600018: Clicto Print, Jaleel Towers, 42 KB Dason Road, Teynampet).
184 பக்கம், விலை: இந்திய ரூபா 225., அளவு: 22.5×15 சமீ., ISBN: 978-93-5523-057-7.
சாத்தானின் விரல்கள், முட்டிக் கத்தரிக்காய், வரகு மான்மியம், மரங்களும் நண்பர்களே, வீரசிங்கம் பயணம் போகிறார், ஒட்டுக் கன்றுகள், என்.பி.கே., தம்பித்துரை அண்ணையும் பேரனும் ஆறு ஐமிச்சங்களும், கறுத்தக் கொழும்பான், கற்பக விருட்சம், பூக்களே காதல் செய்யுங்கள், வெடுக்குப் பத்தன், சீன நாட்டு நண்பரும் எருமை மாட்டுப் புல்லும் ஆகிய தலைப்புகளில் ஆ.சி.கந்தராஜா அவ்வப்போது எழுதிய 13 கட்டுரைகள் இத்தொகுதியில் இடம்பெற்றுள்ளன. இக்கட்டுரைகள் தாவரங்களைப்பற்றிப் பேசுகின்றனவெனப் பொதுவாகக் குறிப்பிட்டாலும் தாவரங்களை நிமித்தமாகக் கொண்டு மனிதர்களின் மெய்யுரைக்கும் ஒரு நூல் இது என்பதே பொருத்தமானதாகும். மண் தான் தாவரங்களையும் வளர்க்கின்றது. மனிதர்களையும் காக்கின்றது. ஒருவகையில் பார்த்தால், சில கூடுதல் அறிவுடன் மானிடனும் ஒரு இடம்பெயரும் தாவரம் தான். நுலாசிரியர் ஆசி. கந்தராஜா, அவுஸ்திரேலியாவில் புலம்பெயர்ந்து வாழ்ந்துவருகிறார்.