இர.சிவலிங்கம் ஞாபகார்த்தக் குழு. கொழும்பு 8: இர.சிவலிங்கம் ஞாபகார்த்தக் குழு, BQ 2/2, மங்கள வீதி, மனிங் டவுன் வீடமைப்புத் திட்டம், 1வது பதிப்பு, ஜ{லை 2000. (கொழும்பு 13: யுனி ஆர்ட்ஸ் பிரைவேட் லிமிட்டெட், 48 B, புளுமெண்டால் வீதி).
viii, 166 பக்கம், விலை: ரூபா 150., அளவு: 21.5×14 சமீ.
அமரர் இர.சிவலிங்கம் (17.05.1932-09.07.1999) அவர்களின் முதலாவது நினைவு தினத்தை யொட்டி நடாத்தப்பட்ட கட்டுரைப் போட்டியில் பரிசுபெற்ற கட்டுரைகளின் தொகுப்பு. பெருந்தோட்டத்துறை தமிழ் இளைஞர்: இன்றும் நாளையும் (29.7.2000அன்று கொழும்பில் நடைபெற்ற அமரர் இர.சிவலிங்கத்தின் நினைவாக பேராதனை பல்கலைக்கழக பொருளியல்துறைப் பேராசிரியர் மு.சின்னத்தம்பி அவர்கள் ஆற்றிய நினைவுப் பேருரை), மலையக மக்களின் உரிமைப் போராட்டங்கள் (இரா.ஜெ.ட்ரொஸ்கி), ஈழத்துத் தமிழ் இலக்கியப் பரப்பில் மலையக இலக்கியம் (லெனின் மதிவானம்), ஈழத்துத் தமிழ் இலக்கியப் பரப்பில் மலையக இலக்கியம் (சிவன்செயல் இராஜலட்சுமி), மலையகப் பெண்களும் பெண்ணிலை வாதமும் (த.தர்சினி), குடியுரிமைப் பறிப்பும் மலையக சமுதாயத்தில் அதன் தாக்கமும் (செல்லத்துரை கோகிலவர்த்தினி), இன்றைய மலையக இளைஞர்களும் சமூகப் பொறுப்புணர்வும் (க.தமயந்தி) ஆகிய கட்டுரைகள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. கட்டுரைப் போட்டியில் பங்குபற்றியோர், அமரர் இர.சிவலிங்கம் நினைவுதின கட்டுரைப் போட்டி-2000 தொடர்பான வீரகேசரி பத்திரிகை விளம்பரம், அமரர் இர.சிவலிங்கம் ஞாபகார்த்த குழுவினரின் விபரம் ஆகியன பின்னிணைப்புகளாகத் தரப்பட்டுள்ளன.