கே.எஸ்.சிவகுமாரன். பருத்தித்துறை: ஜீவநதி வெளியீடு, கலையகம், சாமணந்தறை ஆலடிப் பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, செப்டெம்பர்; 2021. (பருத்தித்துறை: பரணீ அச்சகம், நெல்லியடி).
iv, 56 பக்கம், விலை: ரூபா 200., அளவு: 21.5×15.5 சமீ., ISBN: 978-624-5881-11-6.
யாழ்ப்பாண மாவட்டத்திலிருந்து வெளிவரும் ஜீவநதி சஞ்சிகையின் ஐப்பசி 2011 இதழ், கே.எஸ்.சிவகுமாரனின் 75ஆவது வயது நிறைவினை நினைவுகூரும் வகையில் சிறப்பிதழாக வெளியிடப்பட்டிருந்தது. அவ்விதழில் ஈழத்து இலக்கிய அறிஞர்கள், ஊடகவியலாளர்கள், எழுத்தாளர்கள் எனப் பலரும் திறனாய்வாளரும், இலக்கியவாதியுமான கே.எஸ்.சிவகுமாரன் அவர்களின் வாழ்வும் பணியும் பற்றி விரிவான கட்டுரைகளை எழுதியிருந்தார்கள். அவர்களின் கணிப்பில் இடம்பெறும் சாரத்தை மாத்திரம் இந்நூலில் கே.எஸ்.சிவகுமாரன் அவர்களே தொகுத்து வழங்கியுள்ளார். அவ்வகையில் க.பரணீதரன் (ஐீவநதி ஆசிரியர்), த.கலாமணி, மானாமக்கீன், அன்புமணி, க.தங்கேஸ்வரி, அ.யேசுராசா, ஊரெழு அ.கனகசூரியர், ஏ.என்.கிருஷ்ணவேணி, அ.சாந்தன், அந்தனி ஜீவா, மேமன் கவி, வஸீம் அக்ரம், மன்னார் அமுதன், நாச்சியாதீவு பர்வீன், எம்.கே.முருகானந்தன், தெணியான், மு.சிவலிங்கம், சண்முகம் சிவலிங்கம், ஏ.இக்பால், வதிரி சி.இரவீந்திரன், புலோலியூர் வேல் நந்தகுமார், வெலிப்பன்னை அத்தாஸ், எஸ்.தில்லைநாதன், எம்.ஏ.நுஃமான், சோ.சந்திரசேகரம், சபா. ஜெயராசா, வ.மகேஸ்வரன், செ.யோகராசா, இ.இராஜேஸ்கண்ணன், கனகசபாபதி நாகேஸ்வரன், எஸ்.விஸ்வநாதன், தம்பிஐயா தேவதாஸ் ஆகிய 32 பிரமுகர்களின் நோக்குகள் இங்கு பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்நூல் 192ஆவது ஜீவநதி வெளியீடாக வெளிவந்துள்ளது.