16823 இன்பமுற வாழ்வதற்கு இலக்கியப் புதையல்கள் (பாகம் 1).

அகணி (இயற்பெயர்: சி.அ.சுரேஸ்). கனடா: சி.அ.சுரேஸ், 1வது பதிப்பு, ஏப்ரல் 2017. (கனடா: சாமந்தி இல்லம், மல்ரிசிமாட் சொலியூசன்ஸ்).

115 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×13.5 சமீ., ISBN: 978-0-9869016-5-2.

கனடா தமிழ் மிரர் பத்திரிகையில் “இன்பமுற வாழ்வதற்கு இலக்கியப் புதையல்கள்” என்ற கட்டுரைத் தெடரொன்றை எழுதிவரும் அகணி, பதினெண்கீழ்க் கணக்கு நூல்களில் இருந்து இன்னா நாற்பது, இனியவை நாற்பது ஆகிய இரண்டு செய்யுள் நூல்களை முன்நிறுத்தி அதன் உரைகளை ஆதாரமாகக் கொண்டு அவ்வுரைகளை அலசி ஆராய்ந்து அவை கூறும் கருத்துக்கள் இக்காலத்தக்கு ஏற்புடையனவா அன்றேல் பொருத்தப்பாடற்றனவா என்று ஆராய்ந்து கருத்துரைத்திருக்கிறார். ஏறக்குறைய 1500 ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழரிடையே நிலவிய வாழ்க்கை முறைகளை பண்பாடு, அவர்கள் பின்பற்றிய பழக்க வழக்கங்களை இன்றைய தலைமுறைகள் மனக்கண்ணில் கண்டின்புறவும் இறும்புதெய்தவும் இந்நூல்வழியே வழிவகுத்துள்ளார்

ஏனைய பதிவுகள்

17940 தமிழீழ தேசியக் கவிஞர் புதுவை இரத்தினதுரை பவளவிழா சிறப்பு மலர்- 2024.

பார்த்தீபன், எழிலினி, நிலவன், அ.இன்பன், குமாரசாமி பரராசா (தொகுப்பாசிரியர்கள்). பிரான்ஸ்: வெளியீட்டுப் பிரிவு, சங்கநாதம் கலைக் குழுமம், தமிழர் கலை பண்பாட்டுக் கழகம், 1வது பதிப்பு, மார்ச் 2024. (பிரான்ஸ்: அச்சக விபரம் தரப்படவில்லை).